IAF Helicopter Crash: முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உயிரிழப்பு

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 பேர் இறந்து விட்டதாக, அதிகார் அபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 8, 2021, 06:26 PM IST
IAF Helicopter Crash: முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உயிரிழப்பு title=

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 பேர் இறந்து விட்டதாக, அதிகார் அபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜெனரல் பிபின் இராவத் (Bipin Rawat, PVSM, UYSM, AVSM, YSM, VSM) இந்திய ராணூவத்தின்  27-வது தலைமைப் படைத்தலைவராக பணியாற்றினார்.   2019,  டிசம்பர்  30 இந்தியாவின் பாதுகாப்புப்படைகளின்  முதலாவது தலைமைப் படைத் தலைவராக  நியமிக்கப்பட்டார். இதை அடுத்து இந்தியப் பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவராக  2020 ஜனவரி 1ம் தேதி அன்று பதவி ஏற்றார்.

ALSO READ | குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: அவசர மத்திய அமைச்சரவை கூட்டம்!

ஜெனரல் பிபின் ராவத், சிம்லாவில் உள்ள செயிண்ட் எட்வார்ட் பள்ளியில் படித்தார். பின் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயின்றார். அவர் 1978ம் ஆண்டு டிசம்பர் மாதம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி நிலையத்தில் உள்ள பதினோராவது கூர்கா ரைபிள்ஸ் பிரிவின் ஐந்தாவது படையணியில் சேர்ந்தார்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தை அடுத்து கோவைக்கு முக்கிய தலைவர்கள், மத்திய மாநில அமைச்சர்கள் ராணுவ உயரதிகாரிகள் வருகை தர இருப்பதை தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ALSO READ | Breaking News: நீலகிரி ஹெலிகாப்டர் விபத்து: நான்கு பேர் பலி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News