ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மேரி கோம், இந்தியன் ஓபன் குத்துச்சண்டை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்!
இந்தியன் ஓபன் குத்துச்சண்டை போட்டிகள் டெல்லியில் நடைப்பெற்று வருகிறது. இதில் இன்று நடைப்பெற்ற அரையிறுதிப் போட்டியில் வெற்றிப் பெற்று இந்திய வீராங்கனை இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
நேற்றைய தினம் நடைப்பெற்ற பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவு கால்இறுதி சுற்றில், இந்திய வீராங்கனை மேரிகோம் 5-0 என்ற கணக்கில் சக நாட்டு வீராங்கனை பினா தேவியை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தார்.
Today with coaches after winning semi final bout. #PunchMeinHaiDum Ready for final bout tomorrow. Could not attend the prestigious @kheloindia opening ceremony. My best wishes for success of @kheloindia pic.twitter.com/EaBliLM9po
— Mary Kom (@MangteC) January 31, 2018
இன்றைய போட்டியில் இவர் மங்கோலியாவின் அல்டான்ஸ்செட்செக் லூட்சாய்ஹான்-வை எதிர்கொண்டு வெற்றிப்பெற்றார். இதனையடுத்து நாளை நடைப்பெறவுள்ள இறுதிப் போட்டியில் பிலிப்பைன்ஸின் ஜோஷி காபுகோ-வை எதிர்கொள்கின்றார்.
எனினும் ஆசிய பதக்கம் வென்ற ஷிவதபா, ஆண்கள் பிரிவின் அரையிறுதியில் தோல்வியடைந்தார். இவர் நேற்றைய போட்டியில் ஆண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவு கால்இறுதி சுற்றில், உஸ்பெகிஸ்தான் வீரர் ஷெர்பெக்கை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.
எனினும் இன்றைய போட்டியில் ஏமாற்றத்தினை அளித்துள்ளார்!