சிறப்பு ரயில்களில் பயணிக்க விதிமுறைகள், கட்டுப்பாடுகள் என்ன?

ஊரடங்கிற்கு  இடையே இயங்கும் தொழிலாளர்  சிறப்பு ரயில்களால் ஏற்படும் விபத்துக்கள் காரணமாக ரயில்வே துறை விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

Last Updated : May 29, 2020, 07:01 PM IST
சிறப்பு ரயில்களில் பயணிக்க விதிமுறைகள், கட்டுப்பாடுகள் என்ன? title=

ஊரடங்கிற்கு  இடையே இயங்கும் தொழிலாளர்  சிறப்பு ரயில்களால் ஏற்படும் விபத்துக்கள் காரணமாக ரயில்வே துறை விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

கொரோனா முழு அடைப்பால் பிற மாநிலங்களில் சிக்கி தவிக்கும் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர் நலன் கருதி இயக்கப்பட்ட ரயில்களில் பயணிக்கும் தொழிலாளர்கள், தங்கள் பயணத்தின் போது பல வேதனை அனுபவிப்பதாக தெரிகிறது. இதற்கு காரணமாக இந்திய ரயில்வே துறையினையும் பலம் விரல் காட்டி வருகின்றனர்.

இதுபோன்ற சூழ்நிலையில், இந்திய ரயில்வே இன்று ஒரு முறையீடு செய்துள்ளது. இந்த முறையீட்டின் மூலம், கர்ப்பிணிப் பெண்கள், 10 வயதுக்குக் குறைவான குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இந்த தொழிலாளர் ரயில்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் ஏற்கனவே ஏதேனும்  உடல்நலப் பிரச்சினை கொண்டுள்ளவர்களும், இந்த ரயில்களில் பயணிக்கக் வேண்டாம் என இந்திய ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், தொழிலாளர் சிறப்பு ரயில்களில் பயணித்த பல பயணிகள் இறந்ததாக செய்திகள் வெளியான பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல,  ரயில்வே மே 1 முதல் தினமும் தொழிலாளர்களுக்காக  சிறப்பு தொழிலாளர் ரயில்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் தற்போது பயணிகளின் நலன் கருதி இந்திய ரயில்வே சில வேண்டுகோள்களை முன் வைத்துள்ளது...

மொழியாக்கம்: லீமா ரோஸ்

Trending News