நாடு முழுவதும் 3543 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை புதன் அன்று வரை இயக்கியுள்ளதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. 26 நாட்களில் சுமார் 48 லட்சம் பயணிகளை தங்கள் சொந்த மாநிலங்களுக்கு கொண்டு சென்றுள்ளது எனவும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"2020 மே 27-ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 3543 'ஷ்ராமிக் ஸ்பெஷல்’ ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில் 26.05.2020 அன்று, 255 ஷ்ராமிக் ஸ்பெஷல்கள் இயக்கப்பட்டது. இந்த சிறப்பு ரயில்கள் மூலம் தற்போது வரை, சுமார் 48 லட்சம் புலம்பெயர்ந்தோர் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 3543 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்து இயக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. ரயில்வேயின் தகவல்கள் படி இந்த ரயில்கள் குஜராத் (946), மகாராஷ்டிரா (677), பஞ்சாப் (377), உத்தரபிரதேசம் (243), மற்றும் பீகார் (215) ஆகிய ஐந்து மாநிலங்கள் அதிக ரயில் சேவைகளை பயன்படுத்திய மாநிலங்கள் ஆகும்.
"இந்த" ஷ்ராமிக் சிறப்பு "ரயில்கள் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சென்றடைந்துள்ளன. அதிகபட்ச ரயில்களை பெற்ற முதல் ஐந்து மாநிலங்கள் உத்தரபிரதேசம் (1392), பீகார் (1123), ஜார்க்கண்ட் (156), மத்திய பிரதேசம் (119), ஒடிசா (123) )," என்று அறிக்கை கூறியது.
IRCTC, 78 லட்சத்துக்கும் மேற்பட்ட இலவச உணவுகளையும், 1.10 கோடிக்கும் அதிகமான தண்ணீர் பாட்டில்களையும் பயணக் குடியேறியவர்களுக்கு விநியோகித்துள்ளது எனவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஷ்ராமிக் ஸ்பெஷல்களுக்கு மேலதிகமாக, புது டெல்லியை இணைக்கும் 15 ஜோடி சிறப்பு ரயில்களையும் ரயில்வே இயக்குகிறது, மேலும் ஜூன் 1-ஆம் தேதி துவங்கி மேலும் 200 கால அட்டவணை ரயில்களை தொடங்க திட்டமிட்டுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் சிறப்பு ரயில்களில் வெவ்வேறு இடங்களில் சிக்கித் தவிக்கும் பிற நபர்களின் நடமாட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் ரயில்வே துறை இந்த தகவலை அளித்துள்ளது.