உணவுகளை போல இனி மதுபானங்களும் ஹோம் டெலிவரி!

ஆன்லைனில் மது விநியோகம் செய்யும் பல நிறுவனங்களால் இதுவரை 10 நிமிடங்களில் டெலிவரி செய்யும்  சேவையை வழங்கவில்லை.  

Written by - RK Spark | Last Updated : Jun 4, 2022, 01:23 PM IST
  • ஆர்டர் செய்த 10 நிமிடங்களில் மதுபானம் டெலிவரி.
  • அசத்தும் ஸ்டார்அப் நிறுவனம்.
  • வேறு எந்த நிறுவனமும் இப்படி வழங்கவில்லை என்று அறிக்கை.
உணவுகளை போல இனி மதுபானங்களும் ஹோம் டெலிவரி! title=

மதுபான கடைகளுக்கு சென்று காத்திருந்து மதுவை வாங்காமல் வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்யலாம். அவ்வாறு ஆர்டர் செய்யும் மதுவை தற்போது ஒரு நிறுவனம் வெறும் 10 நிமிடங்களில் ஹோம் டெலிவரி செய்கிறது.  கொல்கத்தாவில் உள்ள ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் 10 நிமிடங்களில் மதுபானத்தை டெலிவரி செய்யும் சேவையை தொடங்கியுள்ளதாக அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இன்னோவென்ட் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்-ன் முதன்மை பிராண்டான 'பூசி(Booozie)', இந்தியாவின் முதல் 10 நிமிட மதுபான விநியோக தளம் என்று கூறியுள்ளது. 

மேலும் படிக்க | Heli Tourism: கர்நாடக விவசாயிகளின் இலவச ஹெலிகாப்டர் பயணம்

ஆன்லைன் மூலமாக பல நிறுவனங்கள் ஏற்கனவே மதுபானங்களை வீடுகளுக்கு டெலிவரி செய்து வருகிறது.  அதே சமயம் நிறுவனங்கள் ஹோம் டெலிவரி செய்தாலும், இதுவரை ஆர்டர் செய்த் 10 நிமிடத்தில் டெலிவரி செய்யும் சேவை எதையும் வழங்கவில்லை இல்லை என்று ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.  மேற்கு வங்க மாநில கலால் துறையின் ஒப்புதலுக்குப் பிறகு கிழக்குப் பெருநகரில் இந்த சேவை தொடங்கப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.  "பூசி (Booozie) என்பது நுகர்வோர் நடத்தை மற்றும் ஒழுங்கு முறைகளை முன்னறிவிக்கும் புதுமையான ஏஐ-யை பயன்படுத்தி 10 நிமிடத்தில் மதுபானங்களை டெலிவரி செய்வதுடன், அருகிலுள்ள கடையிலிருந்து மதுபானங்களை எடுத்துச் செல்லும் ஒரு விநியோகத் தொகுப்பாகும்".  

இன்னோவென்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம், பி2பி லாஜிஸ்டிக்ஸ் மேலாண்மை தளத்தை உருவாக்கியுள்ளது, இது டெலிவரி செலவுகளை மேம்படுத்தி 'பூசி(Booozie)'யை மலிவான தளமாக மாற்றும்.  நுகர்வோர் தேவை மற்றும் சந்தையில் தற்போதைய விநியோகத்தின் பற்றாக்குறையை எளிதாக்க, இதுபோன்ற விநியோகத்திற்கு அனுமதியளித்த மேற்கு வங்க அரசின் நடவடிக்கைகளை வரவேற்கிறோம் என்று 'பூசி(Booozie)' இணை நிறுவனர் மற்றும் சிஇஓ விவேகானந்த் பலிஜேபள்ளி கூறினார்.  மேலும் குறைந்த வயதுக்குட்பட்ட நபர்களுக்கு விநியோகம், கலப்படம், அதிகப்படியான நுகர்வு போன்ற மதுபான விநியோகத்துடன் தொடர்புடைய பெரும்பாலான அச்சங்கள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | காரில் வைத்து சிறுமி கூட்டு பலாத்காரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News