இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 4.5% சரிவு..!

நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 6 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு 4.5 சதவீதமாக வீழ்ச்சி!!

Updated: Nov 30, 2019, 06:35 AM IST
இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 4.5% சரிவு..!

நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 6 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு 4.5 சதவீதமாக வீழ்ச்சி!!

டெல்லி: இந்திய பொருளாதாரம் செப்டம்பர் காலாண்டில் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியை பதிவு செய்தது. வெள்ளிக்கிழமை மாலை அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்த நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 5 சதவீதமாகக் குறைந்துள்ளது, இது ஜூன் முதல் ஆறு ஆண்டுகளில் மற்றும் ஒரு காலாண்டில் மிகக் குறைவு.

முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை - செப்டம்பர் காலாண்டில் உள்நாடு உற்பதி 7 சதவீதமாக இருந்தது. பொருளாதார வல்லுனர்கள் எதிர்பார்த்த அளவை விட இந்தியாவின் வளர்ச்சி குறைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.7 சதவீதமாக இருக்கும் என்று வல்லுனர்கள் எதிர்பார்த்த நிலையில், அதற்கும் குறைவான உற்பத்தியே தற்போது ஏற்பட்டுள்ளது.

கடந்த 2013-ல் ஜனவரி முதல் மார்ச் வரையிலான கால கட்டத்தில் ஜி.டி.பி. 4.3 சதவீதமாக குறைந்திருந்தது. முதன்முறையாக ஜிடிபி 5 சதவீதத்திற்கும் கீழே சென்றது அப்போதுதான். அதன்பின்னர், இந்த காலாண்டில்தான் உள்நாட்டு மொத்த உற்பத்தி சரிவை சந்தித்திருக்கிறது. 

இன்னும் சில நாட்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரியான திசையில் பயணிக்கும் என்று மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தும் வகையில், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விதிக்கப்பட்ட அதிக வரிகள் நீக்கம், வங்கிகள் ஒருங்கிணைப்பு, கார்ப்பரேட் வரிகள் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு செய்திருக்கிறது. 

நேற்று முன்தினம் மாநிலங்களவை விவாதத்தின்போது பேசிய மத்திய நிதியைமச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்தாலும் தேக்க நிலைக்கு செல்லவில்லை என்று தெரிவித்தார். ரிசர்வ் வங்கியும் ரெப்ரோ ரேட்டை குறைத்திருக்கிறது. பொருளாரத்தை ஊக்கப்படுத்தும் நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டபோதிலும், நிலைமை சீரடைய இன்னும் சில காலம் ஆகும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.