ITR Filing தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது: கடைசி தேதி என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்

ITR Filing Date Extended: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 9, 2021, 08:00 PM IST
ITR Filing தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது: கடைசி தேதி என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள் title=

ITR Filing Date Extended: ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை வருமான வரித்துறை நீட்டித்துள்ளது. வருமான வரி செலுத்துவோர் இனி டிசம்பர் 31 வரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியும்.

முன்னதாக செப்டம்பர் 30, 2021 வரை காலக்கெடு இருந்தது. தற்போது டிசம்பர் 31, 2021 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. 2020-21 நிதியாண்டுக்கான தனிநபர்களுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை இன்று (வியாழக்கிழமை) மத்திய அரசு நீட்டித்தது. தணிக்கை செய்யப்பட வேண்டியதில்லை மற்றும் ITR-1 அல்லது ITR-4 படிவங்களைப் பயன்படுத்தி வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்பவர்கள் பொருந்தும்.

2020-21 நிதியாண்டு தனிநபர்களுக்கான வருமான வரி தாக்கல் (ITR) தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31, 2021 வரை இருந்தது. ஏற்கனவே அந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டது ஆனால் புதிய வருமான வரி போர்டலில் சில குறைபாடுகள் மற்றும் பிற பிரச்சனைகளால் இருந்ததால், மீண்டும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ALSO READ |  ITR Filing FY 2020-21: ITR தாக்கல் செய்யும்போது வைத்திருக்க வேண்டிய ஆவணங்களின் செக்லிஸ்ட்

கடந்த ஆண்டும், தனிநபர்களுக்கான ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அரசாங்கம் நான்கு முறை நீட்டித்திருந்தது. முதலில் ஜூலை 31 முதல் நவம்பர் 30, 2020 வரை, பின்னர் டிசம்பர் 31, 2020 வரை, இறுதியாக ஜனவரி 10, 2021 வரை.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News