ITR Filing FY 2020-21: ITR தாக்கல் செய்யும்போது வைத்திருக்க வேண்டிய ஆவணங்களின் செக்லிஸ்ட்

முன்னதாக செப்டம்பர் 30 வரி தாக்கல் செய்ய கடைசி தேதியாக இருந்தது. இப்போது இணையதளத்தின் கோளாறுகள் சரி செய்யப்படாததால் ஐடிஆர் தாக்கல் நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 26, 2021, 05:17 PM IST
ITR Filing FY 2020-21: ITR தாக்கல் செய்யும்போது வைத்திருக்க வேண்டிய ஆவணங்களின் செக்லிஸ்ட் title=

புதுடெல்லி: வருடாந்திர வருமான வரி கணக்கு தாக்கல் (ITR) செய்ய வேண்டிய நேரம் இது. இந்த ஆண்டு, வரி செலுத்துவோர் மதிப்பீட்டு ஆண்டு 2021-22 அதாவது, 2020-21 நிதியாண்டுக்கு (FY 2020-21) ஐடிஆர் தாக்கல் செய்வார்கள்.

அடிப்படையான -  ITR-1 அல்லது சஹாஜ்,  சம்பள வர்க்கத்தில் வரும் வரி செலுத்துவோரால் நிரப்பப்பட வேண்டும். இந்த முறை, வரி செலுத்துவோரின் விவரங்கள், விலக்கு அளிக்கப்படாத கொடுப்பனவுகள், சம்பளத்திற்கு பதிலான லாபம் மற்றும் முன்நிபந்தனைகளின் மதிப்பு போன்றவை தனித்தனி இடங்களில் இந்த படிவத்தில் நிரப்பப்பட வேண்டும்.

ITR-1 SAHAJ-ஐ தாக்கல் செய்வதற்கு முன்னர் இந்த முக்கிய ஆவணங்கள் / தகவல்கள் உங்களிடம் உள்ளதா என்பதை முன்னரே சரிபார்த்து கொள்ளுங்கள்:

1. பொது தகவல்

பான் (PAN)
ஆதார் அட்டை எண்

2. சம்பளம்/ஓய்வூதியம்: முதலாளி / முதலாளிகளிடமிருந்து பெறப்பட்ட படிவம் 16

3. வீட்டுச் சொத்திலிருந்து வரும் வருமானம்

வாடகை ரசீது

வட்டிக் கழிப்புக்கான வீட்டுக்கடன் கணக்கு அறிக்கை

ALSO READ: ITR: வருமான வரி தாக்கல் செய்வதில் நீடிக்கும் சிக்கல்; காலக்கெடு நீட்டிக்கப்படுமா..!!

4. பிற ஆதாரங்கள்

வங்கி அறிக்கை/பாஸ்புக் சேமிப்பு கணக்கு (Savings Account) மற்றும் நிலையான வைப்புகளுக்கான வட்டி

5. அத்தியாயம் VI-A இன் கீழ் விலக்கு கோரிக்கை

- PF/NPS க்கு உங்கள் பங்களிப்பு

- உங்கள் குழந்தைகளின் பள்ளி கல்வி கட்டணம்

- ஆயுள் காப்பீட்டு பிரீமியம் ரசீது

- ஸ்டாம்ப் டியூட்டி மற்றும் பதிவு கட்டணம்

- உங்கள் வீட்டுக் கடனுக்கு (Home Loan) அசல் திருப்பிச் செலுத்துதல்

- ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்பு திட்டம்/ மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள்

- 80G க்கு தகுதியான நன்கொடைகளின் விவரங்களின் ரசீதுகள் 

- 80C, 80CCC மற்றும் 80CCD(1) ஆகிய பிரிவுகளின் கீழ் ஏற்றுக்கொள்ளப்படும் மொத்த தொகைக்கான கழிப்பு . அதிகபட்ச வரம்பு 1.5 லட்சமாக கட்டுப்படுத்தப்படும்.

6. Chapter VIA-இன் பகுதி B இன் கீழ் ஏதேனும் விலக்கு கோருவதற்காக ஏப்ரல் 1, 2020 முதல் ஜூலை 31, 3030 வரை ஏதேனும் முதலீடு/வைப்பு/பணம் செலுத்தியிருந்தால் அதற்கான அட்டவணையை (Schedule Dl) நிரப்பவும்.

7. வரி செலுத்தும் விவரங்கள்

உங்கள் படிவம் 26 ஏஎஸ் -ல் கிடைக்கும் வரிக் கட்டண விவரங்களைச் சரிபார்க்கவும்.

8. TDS விவரங்கள்

- TAN விவரங்கள் மற்றும் உங்கள் படிவம் 16 (சம்பளத்திற்கு), 16A (சம்பளம் அல்லாத வரவு) மற்றும் 16C (வாடகை) ஆகியவற்றில் கிடைக்கும் கடன் தொகையை சரிபார்க்கவும்.

- குத்தகைதாரரின் பான்/ஆதார்

9. பிற தகவல்

- விவசாய வருமானம், ஈவுத்தொகை போன்ற விலக்கு வருமானம் (அறிக்கை நோக்கத்திற்காக மட்டுமே)

- இந்தியாவில் உள்ள அனைத்து செயலில் உள்ள வங்கிக் கணக்குகளின் விவரங்கள் (பணத்தைத் திரும்பப்பெறுவதற்கு குறைந்தபட்சம் ஒரு கணக்கைத் தேர்ந்தெடுக்க வேண்டும்)

- நிவாரண u/s 89 கோரப்பட்டால் படிவம் 10E

இதற்கிடையில், புதிய வருமான வரி இணையதளம் சிக்கல்களை எதிர்கொண்டதால், மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) 2020-21 நிதியாண்டுக்கான (AY 2021-22) வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு அறிக்கையின்படி, முன்னதாக செப்டம்பர் 30 கடைசி தேதியாக இருந்தது, இப்போது இணையதளத்தின் கோளாறுகள் சரி செய்யப்படாததால் ஐடிஆர் தாக்கல் நீட்டிக்கப்படும் என்று தெரிகிறது. பல பயனர்கள் இந்த வலைத்தளத்தில் உள்ள குறைபாடுகள் பற்றி புகார்களை அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: Income Tax Return: வருமான வரி தாக்கல் செய்கையில் ஏற்படும் பொதுவான தவறுகள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News