கட்சி பதவியோ, பலனையோ எதிர்பார்க்காமல் பாஜகவுக்கு தொண்டாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்!
நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி தொடங்கி, கடந்த 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மக்களவைத் தேர்தலை மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் போட்டியிட்டன. இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை காலை தொடங்குகிறது.
முதலில் தபால் வாக்குகளும், அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படவுள்ளன. இதையொட்டி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அனைத்து மையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கான பணிகளை தேர்தல் ஆணையமும் தீவிரமாக செய்து வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரபிரதேச மாநிலம் அமேதி, கேரள மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியை பா.ஜனதா களம் இறக்கியது. ராகுல்காந்தி வயநாட்டில் போட்டியிடுவதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு ஸ்மிருதி இரானி தீவிரமாக பிரசாரம் செய்தார். அமேதியில் தோல்வி பயம் ஏற்பட்டு விட்டதால் அவர் வயநாடு தொகுதிக்கு ஓடி விட்டார் என்று பா.ஜனதாவினரும் ஸ்மிருதி இரானியும் பிரசாரம் செய்தனர்.
அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்ட அவர், டுவிட்டர் மூலம் பாஜக தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில், கட்சி பதவியோ, பலனையோ எதிர்பார்க்காமல், புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கில் கட்சி தொண்டர்கள் கடினமாக உழைத்தாக தெரிவித்தார். கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறையில் உயிர் தியாகம் செய்த தொண்டர்களுக்கு அஞ்சலி செலுத்த வார்த்தை இல்லை என்றும் அவர் பதிவிட்டுள்ளார். அப்போது 57,33 சதவீதம் வாக்குகள் பதிவாகின. கடைசி கட்ட தேர்தல் முடிந்த பிறகு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாயின.
24 hours to go .. while most of us will be glued to our TV sets tomorrow to watch vote by vote, count by count analysis, here’s taking this opportunity to say thank you for the countless blessings of millions across the Nation for my party and my leadership
— Chowkidar Smriti Z Irani (@smritiirani) May 22, 2019