எனது உடல் ஃபிட்னஸை விட கர்நாடக மாநில வளர்ச்சியில் ஃபிட்னஸ்தான் முக்கியம் என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்!
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் இந்தியர்கள் தங்கள் உடலை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி தாங்கள் செய்யும் உடற் பயிற்சியை வீடியோவாக வெளியிடும்படி வலியுறுத்தினார். அதோடு தான் செய்யும் உடற் பயிற்சியையும் டிவிட்டரில் வெளியிட்டு இந்த சேலஞ்சை முன்னெடுக்கும் படி விராட் கோலி, சாய்னா நெஹ்வால், ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோருக்கு பரிந்துரை செய்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட கோலி, தான் உடற் பயிற்சி செய்யும் வீடியோவை டிவிட்டரில் பதிவிட்டார். கூடவே பிரதமர் மோடி, கேப்டன் கூல் தோனி, தனது மனைவி அனுஷ்கா ஷர்மா ஆகியோருக்கும் இந்த ஃபிட்னெஸ் சேலஞ்சை பரிந்துரைத்தார்.
கோலியின் சவாலை மோடி,தான் உடற் பயிற்சி செய்யும் வீடியோவை டிவிட்டரில் இன்று பதிவிட்டார். அதோடு, கர்நாடகா முதல்வர் குமாரசாமி, 2018 காமன்வெல்த் போட்டியில் அதிக பதக்கங்கள் வாங்கிய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ராவு. 40 வயதுக்கு மேற்பட்ட துணிச்சலான ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு உடற்தகுதி குறித்து மோடி சவால் விடுத்துள்ளார்.
I am delighted to nominate the following for the #FitnessChallenge:
Karnataka’s CM Shri @hd_kumaraswamy.
India’s pride and among the highest medal winners for India in the 2018 CWG, @manikabatra_TT.
The entire fraternity of brave IPS officers, especially those above 40.
— Narendra Modi (@narendramodi) June 13, 2018
தற்போது, மோடியின் சவாலிற்கு குமாரசாமி இதற்கு பதில் கூறியுள்ளார்...! அதில், எனது உடல்நலனில் அக்கறை கொண்ட தங்களுக்கு மிகவும் நன்றி குமாரசாமி பதில் அளித்துள்ளார்.
இதற்கு பதில் அளித்து பேசிய குமாரசாமி...! எனது உடல்நலனில் அக்கறை கொண்ட தங்களுக்கு மிகவும் நன்றி; எனது உடல் ஃபிட்னஸை விட கர்நாடக மாநில வளர்ச்சியின் ஃபிட்னஸ் குறித்தே அதிக அக்கறை கொள்கிறேன். அதற்கு உங்கள் ஆதரவு தேவை என்றார்.