BBC வெளியிட்டுள்ள மிகவும் உற்சாகமான 100 பெண்களின் பட்டியலில் காஷ்மீரின் இரும்பு பெண்மணி பர்வீனா அஹாங்கர்..!
சர்வதேச அளவில் செல்வாக்குமிக்க 100 பெண்கள் குறித்த பட்டியலை பிபிசி வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் 7 இந்தியப் பெண்கள் இடம்பெற்றுள்ளனர். கவிஞர்கள், தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள் என சர்வதேச அளவில் பல துறைகளில் இருந்தும் செல்வாக்குமிக்க டாப் 100 பெண்களைத் தேர்ந்தெடுத்து பட்டியல் ஒன்றை பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பெண்களுள் இந்தியாவைச் சேர்ந்த 7 பெண்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
இந்த ஏழு இந்தியப் பெண்களும் கூட வெவ்வேறு துறையைச் சேர்ந்த வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் ஆவர். இளம் வயது பெண் முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை செல்வாக்குமிக்க டாப் 100 பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.
காஷ்மீரின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்படும் மனித உரிமை ஆர்வலர் பர்வீனா அஹாங்கர். பர்வீனா தனது பணிக்காக பல பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். அவர் 2015 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார். அவரது மனித உரிமை பணிகளுக்காக நோர்வேயின் ராஃப்டோ பரிசு 2017 உடன் கௌரவிக்கப்பட்டார். ஆர்ப்பாட்டங்களைத் தொடங்க தன்னை வழிநடத்தியதை நினைவு கூர்ந்த பர்வீனா, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த செய்தி போர்ட்டுக்கு தனது மகன் 11 ஆம் வகுப்பு மாணவனாக இருந்தபோது கடத்தப்பட்டதாக கூறினார்.
"அவர் கடத்தப்பட்டதைப் பற்றி நான் அறிந்த பிறகு, அவர் விரைவில் விடுவிக்கப்பட்டு வீட்டிற்கு வருவார் என்று நினைத்தேன். ஆனால் அதன் பின்னர் நான் காத்திருக்கிறேன். இப்போது எனது காத்திருப்பு அதன் 27 ஆவது ஆண்டில் நுழைந்துள்ளது," என்று அவர் போர்ட்டல் மேற்கோள் காட்டினார்.
இளம் கவிஞர் 21 வயதான அரன்யா ஜோஹர், இந்திய விண்வெளிப் பெண் என்ற அழைக்கப்படும் சுஷ்மிதா மோஹண்டி இடம்பெற்றுள்ளனர். மேலும், பாலின ஆர்வலர் சுப்பலட்சுமி நந்தி, யோகா குரு 26 வயதான நடாஷா நோயல், இந்திய சிப்கோ இயக்கம் நடத்திய வந்தனா சிவா, பெண் மருத்துவர் வந்தனா சிங் ஆகிய எழுவர் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.