பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்குக் கேரளா உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது!!
கல்வி நிறுவன வளாகங்களில் அரசியல் செய்வதற்கு எதிராக கேரளாவை சேர்ந்த 20 கல்வி நிறுவனங்கள் சார்பில் கேரளா உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை கேரளா உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தலைமையிலான அமர்வு விசாரித்தது. பொது போராட்டங்களால் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படக் கூடாது.
கல்லூரிகள் படிப்பதற்கான இடம் மட்டுமே, போராட்டம் செய்வதற்கு அல்ல. கல்வி நிறுவன வளாகங்களில் எந்த பேரணியோ அல்லது போராட்டமோ நடத்தக் கூடாது; யாரையும் போராட்டத்திற்கு தூண்டக் கூடாது என கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Kerala HC bans student strikes in schools, colleges
Read @ANI Story l https://t.co/ZpjWVS6Qsl pic.twitter.com/Rr0edO8KPP
— ANI Digital (@ani_digital) February 26, 2020
மேலும், மற்றவர்களின் உரிமைகளுக்கு பங்கம் விளைவிக்கக் கூடாது. கல்லூரி வளாகங்களில் அமைதியான முறையில் ஆலோசிக்கலாம் அல்லது கருத்துக்களை எடுத்துரைக்கலாம். நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் ஏதாவது நடந்தால், கல்வி நிறுவன நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாம். காவல்துறையினரை அழைத்து, அமைதியை நிலைநாட்டலாம் எனவும் இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.