திருவனந்தபுரம்: இன்று கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், அம்மாநில சட்டசபையில் பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டார். சட்டமன்றத்தில் ஆளுநர் உரையாற்றியபோது, காங்கிரஸ் ஆதரவுடைய ஐக்கிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர்கள் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான சுவரொட்டிகளைக் காட்டினர். சட்டமன்றத்தின் பட்ஜெட் உரையாற்ற சட்டசபை கூட்டத்திற்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் வந்தவுடன், யுடிஎஃப் எம்எல்ஏக்கள் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சிஏஏ (CAA) மற்றும் என்ஆர்சிக்கு (NRC) எதிராக கோஷங்களை எழுப்பத் தொடங்கினர். மேலும் சட்டமன்ற உறுப்பினர்களின் கைகளில் குடியுரிமைச் சட்டத்தை எதிர்க்கும் சுவரொட்டி மற்றும் போஸ்டர்களை தங்கள் கைகளில் வைத்திருந்தனர்.
கேரள முதல்வர் முதல்வர் பினராயி விஜயன் (Pinarayi Vijayan) உடன் சென்றது ஆளுநர் சட்டமன்றத்துக்கு வருகை வந்தார். இதற்கிடையில், யுடிஎஃப் எம்எல்ஏக்கள் ஆளுநரின் வழியைத் தடுத்து, "ஆளுநரிடம் திரும்பிச் செல்லுங்கள்" என்று கத்தத் தொடங்கினர். இதன் பின்னர், ஆளுநர் தனது உரையை சபையில் ஆரம்பித்தவுடன். யுடிஎஃப் எம்எல்ஏக்கள் சட்டசபையிலிருந்து வெளியேறினர்.
#WATCH Thiruvananthapuram: United Democratic Front (UDF) MLAs block Kerala Governor Arif Mohammad Khan as he arrives in the assembly for the budget session. CM Pinarayi Vijayan also accompanying the Governor. pic.twitter.com/oXLRgyN8Et
— ANI (@ANI) January 29, 2020
Thiruvananthapuram: United Democratic Front (UDF) MLAs protest against CAA, NRC in the state assembly. Also raise slogans of 'recall Governor" as Kerala Governor Arif Mohammad Khan arrives in the house. pic.twitter.com/xwXHHPsaGo
— ANI (@ANI) January 29, 2020
கேரளாவின் 140 இருக்கைகள் கொண்ட சட்டமன்றத்தில், ஆளும் இடது ஜனநாயக முன்னணியில் (எல்.டி.எஃப்) 92 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்பதை எங்களுக்கு நினைவுப்படுத்துகிறோம். எதிர்க்கட்சியில் வரிசையில் அமர்ந்துள்ள காங்கிரசுடன் கூட்டணியில் உள்ள யுடிஎஃப், 45 எம்எல்ஏக்களின் ஆதரவைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Thiruvananthapuram: United Democratic Front (UDF) MLAs stage a walk-out from the assembly as Kerala Governor Arif Mohammad Khan begins his address. https://t.co/ohQS12yVQr pic.twitter.com/sqE05PSQtS
— ANI (@ANI) January 29, 2020
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.