அக்டோபர் முதல் தேதியிலிருந்து உங்கள் பாக்கெட்டில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா?

அக்டோபர் 1 முதல், நாடு முழுவதும் பல மாற்றங்கள் நடைபெறுகின்றன, அவற்றால் மக்களுக்கு நிதி ரீதியான பாதிப்புகள் ஏற்படும்.   உஜ்வாலா இணைப்பு இலவசமாக வழங்குவது நிறுத்தப்படும், தொலைகாட்சிய்யின் விலைகள் அதிகரிக்கிறது. வரி விதிகளில் மாற்றங்கள் இருக்கும். இதுபோன்ற பல மாற்றங்கள் பற்றிய விரிவான தகவல்கள்...

Written by - ZEE Bureau | Edited by - ZEE Bureau | Last Updated : Sep 30, 2020, 11:18 PM IST
  • உஜ்வாலாவுக்கு இனி கட்டணம் செலுத்த வேண்டும்...
  • சுகாதார காப்பீட்டுத் திட்டமும் மாறப்போகிறது.
  • இனிப்பு திண்பண்டங்களில் Best Best before use என காலக்கெடு குறிப்பிடப்படுவது அவசியம்...
அக்டோபர் முதல் தேதியிலிருந்து உங்கள் பாக்கெட்டில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா?

புதுடெல்லி: செப்டம்பர் மாத காலாண்டு முடிவடைந்து, அக்டோபர் மாதத்தின் முதல் தேதியன்று அடுத்த காலாண்டு தொடங்கும்போது பல மாற்றங்கள் ஏற்படவிருக்கின்றன. மத்திய அரசு, மாநில அரசு, துறைகள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் அறிவித்திருக்கும் மாற்றங்கள் அக்டோபர் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. இந்த மாற்றங்களின் விளைவு உங்கள் பர்ஸையும் பதம் பார்க்கலாம்.  

உஜ்வாலாவுக்கு இனி கட்டணம் செலுத்த வேண்டும்
தகவல்களின்படி, அக்டோபர் 1 முதல் பிரதமர் உஜ்வாலா யோஜனா (PMUY) திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு இணைப்பை வழங்கும் காலம் 2020 செப்டம்பர் 30ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஏப்ரல் மாதம் முடிவடைந்த இந்த திட்டத்தை ஏற்கனவே மத்திய அரசு செப்டம்பர் வரை நீட்டித்தது.கொரோனா பாதிப்பால் ஏற்கனவே நொந்து போயிருந்த மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இரண்டு காலாண்டுகளுக்கு திட்டம் நீட்டிக்கப்பட்ட்து. ஆனால், அக்டோபர முதல் தேதியில் இருந்து இலவச உஜ்வாலா திட்டம் இல்லை.  

வருமான வரியில் மாற்றங்கள்
அக்டோபர் முதல் நாளில் இருந்து வருமான வரி (Income Tax) விதிகள் மாறப்போகின்றன. இதில், TCS எனப்படும் Tax Collected at Source அதாவது நாட்டிலிருந்து பணத்தை அனுப்பினாலும் வரி பிடித்தம் செய்யப்படும். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 206C (1G) இன் கீழ், TCS இன் வரம்பை விரிவுபடுத்தி, தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்திற்கும் (Liberalized Remittance Scheme (LRS)) நீட்டிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது பயணம், படிப்பு போன்றவற்றுக்கான செலவுகளும், வெளிநாடுகளில் செய்யப்படும் செலவுகள் ஆகியவற்றிற்கும் வரி விதிக்கப்படும். இதற்கான வரிவிலக்கு உச்ச வரம்பு 7 லட்சம் ரூபாய் ஆகும்.  

TVயின் விலை உயர்ந்தது 
தொலைகாட்சிப் பெட்டியை தயாரிக்க பயன்படுத்தப்படும் open cellகளை இறக்குமதி செய்வதற்கான 5 சதவீத சுங்க வரியை மீண்டும் விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதற்கு முன்னதாக அளிக்கப்பட்டிருந்த ஓராண்டு விலக்கு செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் 32 இஞ்ச் டிவியின் விலையில் 600 ரூபாயும்,  42 இஞ்ச் டிவியின் விலையில் 1,200 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை அதிகரிக்கும் என்று தொலைகாட்சி உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.  

வாகனத்தை ஓட்டும்போது செல்லும் இடத்திற்கு வழி காட்டுவதற்காக அல்லது பாதையை கண்காணிக்க (navigation) மொபைல் பயன்பாட்டுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும், மொபைலில் பேசுவதற்கு எந்த வழியும் இருக்காது. பேசினால், கடுமையான அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

பயனுள்ள செய்தி இது | september 30 Top 10 world news Headlines: From UK to World War III

இனிப்பு திண்பண்டங்களில் Best Best before use என காலக்கெடு குறிப்பிடப்படுவது அவசியம்
இனிமேல் ரசகுல்லா, லட்டு உட்பட எந்தவித இனிப்பு பொருட்களை வாங்கினாலும் Best Best before use என்று குறிப்பிட்டிருக்கிறதா என்பதை பார்த்து வாங்குங்கள். இந்த விதியை உணவு கட்டுப்பாட்டு அமைப்பான FSSAI அமல்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.  

சுகாதார காப்பீட்டுத் திட்டமும் (Health insurance) மாறப்போகிறது.

அக்டோபர் முதல், தற்போதுள்ள மற்றும் புதிய சுகாதார காப்பீட்டுக் திட்டங்களில் மேலும் பல நோய்கள் சேர்க்கப்படும்.  இதற்கான உத்தரவை காப்பீடு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (ஐ.ஆர்.டி.ஏ.) காப்பீட்டு நிறுவனங்களுக்கு அனுப்பிவிட்டது.

இதையும் படிக்கலாமே | நான்காம் நாளாக தொடரும் ஆர்மீனியா-அஜர்பைஜான் போரும், 'மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிட்டதா?' என்ற அச்சமும்... 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News