தண்டனையை குறைக்க கோரிக்கை வைத்த லாலு பிரசாத் யாதவ்!!

இந்தியா லாலு பிரசாத் யாதவின் வழக்கறிஞர் ராஞ்சி சிறப்பு நீதிமன்றத்தில் குறைந்தபட்ச தண்டனை விதிக்க கோரிக்கை மனுவை தாக்கல் செய்துள்ளார்.  

Last Updated : Jan 5, 2018, 01:47 PM IST
தண்டனையை குறைக்க கோரிக்கை வைத்த லாலு பிரசாத் யாதவ்!!

'கால்நடை தீவன ஊழல் வழக்கில், பீஹார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் 15 பேர் குற்றவாளிகள் என சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளதையடுத்து நாளை தண்டனை அறிவிப்பதாக கூறி தற்போது வழக்கு ஒத்திவைத்துள்ளது.

பீஹார் முதல்வராக, 1994 -1996-ல் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர், லாலு பிரசாத் யாதவ் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்து முதல்-மந்திரி ஆனார். அப்போது, கால்நடை தீவனம் வாங்கியதாக போலி பில்கள் கொடுத்து, அரசு கருவூலத்தில் பணம் எடுத்து, மோசடி நடந்ததாக புகார்கள் எழுந்தன.

இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்தியது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தொடர்புள்ள அனைத்து வழக்குகளும், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தன இதில் தியோகர் மாவட்ட கருவூலத்தில், ரூ.89.27 லட்சம் எடுத்து, மோசடி செய்தது தொடர்பான வழக்கின் விசாரணை முடிவடைந்தது.

ராஞ்சி சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சிவ்பால் சிங், கடந்த ஆண்டு டிசம்பரில் தீர்ப்பளித்தார். அப்போது, 'லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி' என, நீதிபதி அறிவித்தார். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும், 15 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

இதை தொடர்ந்து, குற்றவாளி என அறிவிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ் ராஞ்சி பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று தண்டனை விவரன் அறிவிப்பதாக தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் லாலு பிரசாத் யாதவ்வின் தண்டனை குறித்த விபரம் நாளை அறிவிப்பதாக கூறி மத்திய புலனாய்வு விசாரணை(CBI) தற்போது வழக்கினை ஒத்திவைத்துள்ளது.

இதை தொடர்ந்து, இவருக்கு என்ன தண்டனை என்பது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட வேளையில் தற்போது லாலு பிரசாத் யாதவின் வழக்கறிஞர் ராஞ்சி சிறப்பு நீதிமன்றத்தில் குறைந்தபட்ச தண்டனை விதிக்க கோரிக்கை மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் லாலு பிரசாத் யாதவின் உடல்நலக்குறைவு காரணமாக குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் ராஞ்சி சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் "இந்த ஊழலில் நேரடியாக எனக்கு எந்த பாத்திரமும் கிடையாது என்றும், என் வயது மற்றும் உடல் நலத்திற்கு கருத்தில் கொண்டு எனக்கு குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்றும் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

More Stories

Trending News