Tripura Election 2023: 25 ஆண்டுகால CPIM கட்சியின் குண்டர் ஆட்சியை மக்கள் நிராகரித்து 2018 சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்த மக்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? தலைவிதியை நிர்ணயிக்கும் திரிபுரா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. 259 வேட்பாளர்களின் தலைவிதியைத் தீர்மானிக்க வடகிழக்கு மாநிலத்தின் 3,337 வாக்குச் சாவடிகளில் மொத்தம் 28.13 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். 60 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் 28 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தத் தகுதி பெற்றுள்ளனர்.
திரிபுரா சட்டமன்ற தேர்தலில் மும்முனைப் போட்டி
திரிபுரா தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது, ஆளும் பாஜக ஒருபுறம், இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி மறுபுறம் என்றால், மூன்றாவது அணியாக, திப்ரா மோதா (Tipra Motha) களம் இறங்கியுள்ளது. திப்ரா மோதா என்பது வடகிழக்கு மாநிலத்தின் முன்னாள் அரச குடும்பத்தின் வாரிசுகளால் உருவாக்கப்பட்ட ஒரு பிராந்தியக் கட்சியாகும்.
திரிபுரா தேர்தல் முடிவு 2023 தேதி
இன்று மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறும் திரிபுரா சட்டமன்ற தேர்தல் 2023 முடிவுகள் மார்ச் 2 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | ‘பிக் பாஸ் தமிழ்’ புகழ் ஆயிஷாவுக்கும் பேஷன் போட்டோகிராபர் ஹரன் ரெட்டிக்கும் திருமணம்
திரிபுரா முதலமைச்சர் மாணிக் சாஹா
திரிபுரா முதலமைச்சர் மாணிக் சாஹா அகர்தலாவில் உள்ள மகாராணி துளசிபதி பெண்கள் பள்ளி வாக்குச் சாவடியில் இன்று வாக்களித்தார். வாக்களித்த பிறகு ஜீ நியூஸிடம் பேசிய சாஹா, சிபிஎம்-காங்கிரஸ் வன்முறை கலாச்சாரத்தை பரப்புவதாக குற்றம் சாட்டினார், மேலும் இது தனக்கு மிகப்பெரிய சவால் என்றும் கூறினார். டவுன் பர்தோவாலி சட்டமன்றத் தொகுதியில் மாணிக் சாஹா போட்டியிடுகிறார். கடந்த தேர்தலை விட பாஜக சிறப்பாக செயல்படும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
"திரிபுரா மக்கள் மிகவும் அரசியல் உணர்வுடன் உள்ளனர். 25 ஆண்டுகால CPIM கட்சியின் குண்டர் ஆட்சியை மக்கள் நிராகரித்து 2018 சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக ரீதியாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது வரலாற்று சிறப்புமிக்கது என்பதை குறிப்பிட விரும்புகிறேன். பாஜகவை ஜனநாயக ரீதியாக தோற்கடிப்பது சாத்தியமற்றது என்பது எதிரணிக்குத் தெரியும். எனவே அவர்கள் புனிதமற்ற கூட்டணியை உருவாக்க கைகோர்த்துள்ளனர். பாஜகவுக்கு வாக்களித்தால்தான் மாநிலத்தில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்படும் என்பது மக்களுக்குத் தெரியும்" என்று திரிபுராவின் தற்போதைய முதலமைச்சர் மாணிக் சாஹா கூறினார்.
மேலும், எதிர்க்கட்சிகள் நடத்தும் போக்கிரித்தனம் மிகப்பெரிய சவால் என்றும், வன்முறை என்பது இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸின் கலாச்சாரம் என்றும் முதலமைச்சர் கூறினார்.
"அது திப்ர மோதாவாக இருந்தாலும் சரி, காங்கிரஸாக இருந்தாலும் சரி, சிபிஐஎம்மாலும் சரி, அவர்கள் அனைவரும் ரவுடியிசத்தை நம்புகிறார்கள்" என்று மாணிக் சாஹா கூறினார்.
மேலும் படிக்க | சான்ஸே இல்ல...இவ்வளவு கம்மி விலையில iPhone 14 கிடைக்குதா?
2018 சட்டமன்றத் தேர்தலை விட பாஜக அதிக இடங்களைப் பெறும் என்று நம்பிக்கை தெரிவித்த மாணிக் சாஹா, தேர்தலுக்குப் பின்பு, கூட்டணி அமைக்க நேரிடுமா என்ற கேள்வியே எழாது என்று நம்பிக்கைத் தெரிவித்தார். பாஜக தனித்து பெரும்பான்மையைப் பெறும் என்று அவர் நம்புகிறார்..
இன்று (2023 பிப்ரவரி 16) காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறும். 259 வேட்பாளர்களின் தலைவிதியை தீர்மானிக்க வடகிழக்கு மாநிலத்தின் 3,337 வாக்குச் சாவடிகளில் மொத்தம் 28.13 லட்சம் வாக்காளர்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
முதல் ஒரு மணி நேரத்தில் மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் விரும்பத்தகாத சம்பவமோ அல்லது EVM தொழில்நுட்பக் கோளாறுகளோ பதிவாகவில்லை. 3,337 வாக்குச் சாவடிகளில் 1,100 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 28 முக்கியமான வாக்குச் சாவடிகளாகவும் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: மொபைலில் சார்ஜ் விரைவில் காலியாகிறதா? இந்த ஆப்ஸ்லாம் உடனே டெலீட் பண்ணிடுங்க!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ