சீக்காளியின் எரிந்த உடலை சுடுகாட்டில் சாப்பிட்ட மது பிரியர்கள்

குடிபோதையில் சுடுகாட்டில் வைத்து 2 பேர் நர மாமிசம் சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதன் விவரம் என்ன என்பதை முழுமையாக பார்க்கலாம்.  

Written by - Ezhilarasi Palanikumar | Last Updated : Jul 13, 2023, 05:43 PM IST
  • சுடுகாட்டிற்கு சென்று எரிந்த உடலை சாப்பிட்ட இருவர் கைது.
  • 2 பேர் நர மாமிசம் சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சீக்காளியின் எரிந்த உடலை சுடுகாட்டில் சாப்பிட்ட மது பிரியர்கள் title=

குடிபோதையில் சுடுகாட்டில் வைத்து 2 பேர் நர மாமிசம் சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதன் விவரம் என்ன என்பதை முழுமையாக பார்க்கலாம்.

ஒடிசா மாநிலம் உள்ள தண்டுனி கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நபர் ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடலை  உறவினர்கள் இறுதிச் சடங்கு செய்துவிட்டு பின்னர் எரித்தனர். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த 58 வயதான சுந்தர் மோகன் சிங் என்பவரும் 25 வயதான நரேந்திர சிங் என்பவரும் சுடுகாட்டுக்கு வந்துள்ளனர்.  திடீரென யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் எரிந்து கொண்டிருந்த உடலை அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட தொடங்கியுள்ளனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்களும் கிராம மக்களும் படாசாஹி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | தில்லி முதல்வர் கூட்டிய அவசர கூட்டம்... யமுனையில் பெருகும் வெள்ளம்!

பின்னர் சம்பவம் இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவருமே குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது மேலும் இதில் 58 வயதான சுந்தர் மோகன் சிங் என்பவர் ஒரு மந்திரவாதி என்பதும் தெரியவந்தது.

இந்த விவகாரத்தில் சுந்தர் மோகன் சிங், நரேந்திர சிங் ஆகியோர் மீது 297 என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது நாட்டுக்கும் வீட்டுக்கும் மிகப் பெரும் எதிரியாக மாறியிருக்கும் நிலையில் குடிபோதையில் மது பிரியர்கள் நர மாமிசம் சாப்பிட்ட செயல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் ஜூலை 17-18 தேதிகளில் காங்கிரஸ் தலைமையில் கூடும் 24 எதிர் கட்சிகள்...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News