மேகாலயா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் காலை எட்டு மணிக்கு எண்ணத் தொடங்கப்பட்டன. பிப்ரவரி 27 அன்று நடைபெற்ற தேர்தலில், 77.9% வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தினார்கள். மேகாலயாவில் எதிர்க்கட்சிகளின் செல்வாக்கு ஓங்குமா? அல்லது பாஜகவிற்கான சாதகமான சூழ்நிலை தொடருமா என்பதை நிர்ணயிக்கும் வாக்கு எண்ணிக்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது. நிலைமை ஆளும் கட்சிக்கு சாதகமாக உள்ளது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் சில, மேகாலயாவில் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக கூறுகின்றன. மேகாலயாவில் கான்ராட் சங்மா தலைமையிலான NPP கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக பெரும்பாலான கருத்துக் க்ணிப்புகள் தெரிவிக்கின்றன.
தனிப்பெரும் கட்சியாக வெளிவரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேகாலயாவில் தேர்தல் நடந்த 59 இடங்களில் NPP 20 இடங்களில் வெற்றி பெறும் என்று மூன்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் மற்றும் பாஜக தலா 6 இடங்களைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2018 தேர்தலில் 60 இடங்களில் 21 இடங்களைப் பெற்று காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், 20 இடங்களை வென்ற தேசிய மக்கள் கட்சி (NPP), தேர்தலுக்குப் பிந்தைய கட்சிகள் மற்றும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. 1972 இல் உருவாக்கப்பட்ட மேகாலயா மாநிலத்தில் தேசிய மக்கள் கட்சி (NPP) செல்வாக்குடன் இருந்து வருகிறது.
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தல்க்ள், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையிலான பலபரிட்சையாகவும் பார்க்கப்படுகிறது.