Rajasthan Election Results 2023: சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம் , ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்காளிலும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடந்து முடிந்தன. அதைத் தொடர்ந்து இன்று சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய நான்கு மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகின்றது. நாளை மிசோரம் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஐந்து மாநிலங்களுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வியாழனன்று வெளிவந்த நிலையில், ராஜஸ்தானில் தொங்கு சட்டசபை அமையக்கூடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ராஜஸ்தானில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் என்பது கடந்த 30 ஆண்டுகால வழக்கமாக இருகின்றது. ராஜஸ்தானின் தேர்தல் போரில், ஆட்சி மாறுமா அல்லது காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைத்து சரித்திரம் படைக்குமா?