நெல்லூரில் உள்ள ராபூர் காவல்துறையில் உள்ள காவல்துறையினரை உள்ளூர் பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு!!
ஆந்திரா: நெல்லூர் அடுத்த ராபூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக கூறி, காவல்துறையினர் இருவரை கைது செய்துள்ளனர். இதையடுத்து, காவல் நிலையத்துக்கு சென்ற ராஜேஷின் தாய் தமது மகனை விடுவிக்குமாறு கூறியுள்ளார். இவரின் கோரிக்கைக்கு செவிசாய்க்கத காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆத்திரமடைந்த ராஜேஷின் தாய் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று காலை காவல் நிலையத்திற்கு வந்து போலீசாரை சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவத்தில் 4 போலீசார் படுகாயம் அடைந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Andhra: A group of locals attacked Rapur police station in Nellore dist earlier tonight&thrashed police jawans after they took a local into custody in a drink&drive case. 4 cops injured,including a Sub-Inspector&a constable who received head injuries. 4 people taken into custody. pic.twitter.com/ShNfXyrkz2
— ANI (@ANI) August 1, 2018
இந்த தாக்குதலில் சப் இன்ஸ்பெக்டர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.