என்னை அவமதிப்பவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், நான் கழிப்பறைகளுக்கு மட்டுமில்லை. கோடிக்கணக்கான தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கும் காவலாளி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2019 மக்களவை தேர்தலுக்கான பிரசாரத்தில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிரா வர்தா பகுதிக்கு வந்தார். அப்பொழுது பேசிய பிரதர் மோடி காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் காட்சிகளை கடுமையாக தாக்கி பேசினார். மகாராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் என்.சி.பி. கட்சிகளை கும்பகர்ணனை போன்று தூங்கிக் கொண்டு இருக்கிறது. ஏசி அறைகளில் உட்கார்ந்துக் கொண்டு பேசும் இவர்களுக்கு, எங்கே தெரியப்போகிறது 40-42 டிகிரி வெப்பநிலையின் அருமை.
என் கண்கள் காண்கிறது. நான் எங்கு செல்கிறனோ.. அங்கெல்லாம் மக்கள் என்மீது அன்பைக் காட்டுகிறார்கள். இந்த அன்பு போதும், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் நிலை என்னவாகும் என்று. இதையெல்லாம் பார்க்கும் அவர்களுக்கு (காங்கிரஸ்+என்சிபி) நன்றாக தூக்குவார்களா? இல்லையா? என்பது தெரியாது.
மகாத்மா காந்தி மற்றும் வினோபாவின் தூய்மைக்கு அவசியம் என்று பிரதமர் மோடி கூறினார். உங்களுக்கு எல்லாம் தெரியும். காங்கிரஸ் இன்று இந்த நல்லெண்ணத்தை அவமதிக்கிறது.
2 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர், நரேந்திர மோடி கழிப்பறைகளின் காவலாளி என்று கூறினார். என்னை கழிவறைகளின் காவலன் எனக் கூறி நீங்கள்(காங்கிரஸ்) அவமதிக்க நினைக்கலாம். தூய்மை பற்றி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினேன். ஆனால் என்னை அவமதிப்பவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், நான் கழிப்பறைகளுக்கு மட்டுமில்லை.. கோடிக்கணக்கான தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கும் காவலாளி என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.