பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிஎம் போஜன் என்ற பெயரில் மதிய உணவு திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது பள்ளிகளில் நடைமுறையில் இருக்கும் தேசிய மதிய உணவு திட்டத்திற்கு பதிலாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்கு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 1, 30,795 கோடி செலவிடப்பட உள்ளது என கூறினார்.
பிஎம் போஜன் திட்டம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் 11.2 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பிஎம் போஜன் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 11.8 கோடி மாணவர்கள் பயனடைவர். 2021 - 22 நிதியாண்டு முதல் 2025 - 26 வரையிலான ஐந்து வருட காலத்திற்கு இத்திட்டத்திற்கு மத்திய அரசு ரூ. 54, 061 கோடியே 73 லட்சம் செலவிடும். இதுதவிர உணவு தானியதுக்கான கூடுதல் செலவாக ரூபாய் 45 ஆயிரம் கோடியை மத்திய அரசே ஏற்கும்.
மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூபாய் 31,733 கோடியே 17 லட்சம் செலவு ஏற்படும். ஏனவே இந்த திட்டத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 1, 30,794 கோடியாக இருக்கும். அரசு மற்றும் அரசு தொடக்கப் பள்ளிகளில் இயங்கும் மழலையர் வகுப்புகள் மற்றும் அங்கன்வாடிகள் தற்போது இத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. இந்த வகுப்புகளுக்கும் இத்திட்டம் பின்னர் விரிவுபடுத்தப்படும். மேலும், பள்ளிகளை ஊட்டச்சத்து தோட்டங்கள் ஏற்படுத்த அரசு ஊக்குவிக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ALSO READ உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் 45 நிமிட சந்திப்பு.. பாஜகவில் இணைகிறாரா கேப்டன்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR