நிலத்தை தோண்டும் போது வெளிப்பட்ட வெள்ளிப் புதையல்; கொள்ளயடிக்க கூடிய கூட்டம்

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டம் சுசாரி கிராமத்தில் உள்ள வீட்டின் நிலத்தை தோண்டியபோது, ​​மண்ணுடன் வெள்ளி கட்டிகளும், காயின்களும் வெளிவந்தது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 20, 2022, 03:17 PM IST
நிலத்தை தோண்டும் போது வெளிப்பட்ட வெள்ளிப் புதையல்; கொள்ளயடிக்க கூடிய கூட்டம் title=

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டம் சுசாரி கிராமத்தில் உள்ள வீட்டின் நிலத்தை தோண்டியபோது, ​​மண்ணுடன் வெள்ளி கட்டிகளும், காயின்களும் வெளிவந்தது. இதை அறிந்த பொதுமக்கள் திரளாக திரண்டதால்,  அங்கே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மக்கள் வெள்ளி கட்டிகளை அள்ளிச் செல்ல கூடினர். தற்போது இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிப்ரவரி 16 மதியம், தார் மாவட்டத்தின் சுசாரி கிராமத்தில் ஒரு தனியார் நிலத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் நிலத்தை தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. அப்போது, ​​மண்ணுடன் வெள்ளி கட்டிகளும் வெளியே வந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும், மக்கள் கூட்டம் அலைமோதியதுடன், வெள்ளி கட்டிகளை கொள்ளை அடிக்க கிளம்பினர். அங்கு வந்தவர்கள் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு, தற்போது வைரலாகி வருகின்றனர்.

மேலும் படிக்க | நீரில் இருந்து உயரும் நிலம்! சும்மா அதிருது

கூட்டத்தில் இருந்த பலர் வெள்ளியை கொள்ளையடித்ததை, வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். வைரலாகி வரும் வீடியோவில், ஜேசிபி இயந்திரத்தின் மூலம் மண் அகழும் போது வெள்ளிக் கட்டிகளும் வந்தன.

இது குறித்து போலீஸ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து ஸ்டேஷன் இன்சார்ஜ் குக்ஷி தினேஷ் சிங் சவுகானிடம் கேட்டபோது, ​​இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்ததாக கூறினார். போலீசார் அந்த இடத்திற்கு சென்ற போது எதுவும் இல்லை எனக் கூறிய போலீஸார்  மண் தோண்டும்  போது வெள்ளி கட்டிகள் வந்தது தொடர்பாக, சுற்றுவட்டார மக்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

மேலும் படிக்க | இனி 'நரகத்தின் கதவு' யாருக்காகவும் திறக்காது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News