Gates Of Hell: இனி 'நரகத்தின் கதவு' யாருக்காகவும் திறக்காது!! காரணம் இதுதான்!

'நரகத்தின் நுழைவாயில்' இதற்கு இனிமேல் நிரந்தர தடா. இங்கு பல வருடங்களாக எரிந்து கொண்டிருக்கும் தீக்கும் ஒரு முடிவு வரப்போகிறது....

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 10, 2022, 02:27 PM IST
  • மூடப்படுகிறது 'நரகத்தின் கதவு'
  • உத்தரவிட்ட அதிபர்
  • பல தசாப்தங்களாக தொடரும் பிரச்சனைக்கு இனி ஸ்வாஹா!
Gates Of Hell: இனி 'நரகத்தின் கதவு' யாருக்காகவும் திறக்காது!! காரணம் இதுதான்! title=

துர்க்மெனிஸ்தானின் பிரபலமான சுற்றுலா தலமான 'நரகத்தின் நுழைவாயில்' இப்போது மூடப்பட உள்ளது. இங்கு பல வருடங்களாக எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்குமாறு நாட்டு அதிபர் குர்பாங்குலி பெர்டிமுகாமேதோவ் உத்தரவிட்டுள்ளார். 

'நரகத்தின் வாயில்'களைச் சுற்றி வாழும் மக்களின் ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதகமான விளைவுகளை மேற்கோள் காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  

நரகத்தின் கதவு என்று பொருள்படும் 'தி கேட்ஸ் ஆஃப் ஹெல்' (The Gates Of Hell) எனப்படும் இயற்கை எரிவாயு பள்ளம் இப்போது மூடப்படப் போகிறது. 

எரியும் இயற்கை எரிவாயு பள்ளம், தலைநகர் அஷ்கபாத்திற்கு வடக்கே சுமார் 160 மைல் தொலைவில் அமைந்துள்ளது.

 

பல தசாப்தங்களாக தொடர்ந்து எரிந்துவரும் இதுவொரு பாலைவன பள்ளமாகும். துர்க்மெனிஸ்தானுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு முக்கிய ஈர்ப்பாக உள்ளது The Gates Of Hell.

துர்க்மெனிஸ்தானுக்குள் பிற நாட்டவர்கள் செல்வது எளிதானது அல்ல, எனவே இங்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மற்ற நாடுகளை விட குறைவாகவே உள்ளது. 

The Gates Of Hell எனப்படும் இந்த பள்ளம், 1971 இல் எரிவாயுவை எடுப்பதற்காக பூமியை அகழ்ந்தபோது உருவானது. இதன் விட்டம் சுமார் 60 மீட்டர், ஆழம் சுமார் 20 மீட்டர் ஆகும். 

பூமியை அகழும் போது, கசிந்த எரிவாயுவை, அது பரவாமல் தடுக்க இங்கு தீ (Burming Fire) வைத்தனர். உண்மையில், சில வாரங்களில் எரிவாயு எரிந்து தீர்ந்துவிடும் என்று எதிர்பார்த்தனர், ஆனால் அது பல தசாப்தங்களாக தொடர்ந்து எரிந்துக் கொண்டிருக்கிறது.  

ALSO READ | Fingerprints: தீக் காயங்களால் ‘கை விரல் ரேகைகள்’ மாறுமா

அன்று முதல் இங்கு தீ கொழுந்துவிட்டு (Burming Fire) எரிந்து வருகிறது. 'கேட்ஸ் ஆஃப் ஹெல்' இடத்தைப் பார்க்க சுற்றுலாப் பயணிகளிடையே ஆர்வம் அதிகமாக உள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த அணையாத அகோரத்தீ, சுற்றுவட்டாரத்தில் வசிப்பவர்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.  

பல அதிசயங்களின் பிறப்பிடம் துர்க்மெனிஸ்தான்  
துர்க்மெனிஸ்தான் இது போன்ற பல அதிசயங்களைக் கொண்ட நாடு என்றே சொல்லலாம். இங்குள்ள ஆட்சியாளர் தனக்கு பிடித்த நாய்க்காக, 50 அடி தங்க சிலையை அமைத்துள்ளார்.

2007 முதல் ஆட்சி பொறுப்பேற்ற குர்பாங்குலி பெர்டிமுக்மெடோவ், துர்க்மென் அலபி இனத்தைச் சேர்ந்த இந்த நாயின் மாபெரும் சிலையை 2020 இல் திறந்துவைத்தார்.  

ALSO READ | நியூயார்க்கில் மோசமான தீ விபத்து; 9 குழந்தைகள் உட்பட 19 பேர் பலி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News