மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தல் : மும்பையில் சிவசேனா; மற்ற இடத்தில் முத்திரை பதித்த பிஜேபி

Last Updated : Feb 23, 2017, 08:35 PM IST
மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தல் : மும்பையில் சிவசேனா; மற்ற இடத்தில் முத்திரை பதித்த பிஜேபி title=

மும்பை மாநகராட்சி தேர்தலில் இறுதி முடிவுகள்.

சிவசேனா 84 , பாஜக 82, காங்கிரஸ் 31, தேசியவாத காங்கிரஸ் 9, எம்என்எஸ் 7, எஸ்.பி. 6, எம்.ஐ.எம் 3, ஏபிஎஸ் 1, சுயேட்சை4.

தற்போதிய நிலவரப்படி சிவசேனா கட்சி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

மும்பை மாநகராட்சியை பொறுத்தவரை மொத்தம் 227 வார்டுகளில் சிவசேனாவும், பா.ஜ,க ஆவும் வெற்றிகளை குவித்து வருகின்றனர். 10 மாநகராட்சிகள் கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு மாநகராட்சியை கூட பிடிக்க முடியாத அதல பாதாளத்திற்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது. சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், ராஜ்தாக்ரேயின் நவநிர்மாண் சேனாவும் சில சொற்ப இடங்களையே பெற்றுள்ளது. இன்னும் சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்கிறது.

4.00 PM

மொத்தம் 227 வார்டுகளில் சிவசேனா: 84, பா.ஜ.க 80, காங்கிரஸ்: 31, தேசியவாத காங்கிரஸ்: 9, நவநிர்மாண் சேனா: 7, மற்றவை: 7

3.10 PM

சிவசேனா: 92, பா.ஜ.க 77, காங்கிரஸ்: 25, தேசியவாத காங்கிரஸ்: 7, நவநிர்மாண் சேனா: 8, மற்றவை: 7

2.20 PM

மொத்தம் 227: சிவசேனா: 93, பா.ஜ.க 65, காங்கிரஸ்: 22, தேசியவாத காங்கிரஸ்: 7, நவநிர்மாண் சேனா: 10, மற்றவை: 7

1.30 PM

மொத்தம் 227: சிவசேனா: 93, பா.ஜ.க 65, காங்கிரஸ்: 22, தேசியவாத காங்கிரஸ்: 7, நவநிர்மாண் சேனா: 10, மற்றவை: 7

 

மராட்டிய மாநிலத்தில் 10 மாநகராட்சி தேர்தல் நிலவரம்:-

சிவசேனா: 87, பா.ஜ.க 54, காங்கிரஸ்: 19, தேசியவாத காங்கிரஸ்: 6, நவநிர்மாண் சேனா: 1

இன்று காலை முதல் வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதுவரை 75 வார்டுகளில் சிவசேனா கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 39 வார்டுகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இது பாஜகவுக்கு கடுமையான பின்னடைவாகும்.

இந்தத் தேர்தல் பாஜக, சிவசேனா ஆகியவற்றுக்கிடையே பலப்பரீட்டையாகவே இருந்தது. உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா உள்ளிட்ட சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று கொண்டிருக்கும்போது மும்பை உள்ளாட்சி தேர்தல் முடிவானது பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

வார்டு நிலவரம்:-

தானே (130):      சிவசேனா: 23, பா.ஜ.க 9, காங்கிரஸ்: 0, தேசியவாத காங்கிரஸ்: 4, நவநிர்மாண் சேனா: 2

நாசிக் (122):       சிவசேனா: 14, பா.ஜ.க 18, காங்கிரஸ் 18, தேசியவாத காங்கிரஸ் 2, நவநிர்மாண் சேனா 2

புனே (162):        சிவசேனா: 3, பா.ஜ.க 45, காங்கிரஸ்: 6, தேசியவாத காங்கிரஸ் 19, நவநிர்மாண் சேனா 3

அகோலா (73):     சிவசேனா: 0, பா.ஜ.க 7, காங்கிரஸ் 8, தேசியவாத காங்கிரஸ் 1, நவநிர்மாண் சேனா 0

நாக்பூர் (145):      சிவசேனா: 1, பா.ஜ.க 26, காங்கிரஸ் 10, தேசியவாத காங்கிரஸ் 1, நவநிர்மாண் சேனா 0

சோலாப்பூர் (102):  சிவசேனா: 22, பா.ஜ.க 19, காங்கிரஸ் 5, தேசியவாத காங்கிரஸ் 0, நவநிர்மாண் சேனா 0

அமராவதி (100):   சிவசேனா: 2, பா.ஜ.க 11, காங்கிரஸ் 5, தேசியவாத காங்கிரஸ் 0, நவநிர்மாண் சேனா 0

உல்லாஸ்நகர் (78): சிவசேனா: 15, பா.ஜ.க 21, காங்கிரஸ் 1, தேசியவாத காங்கிரஸ் 4, நவநிர்மாண் சேனா 0 

ஜில்லா பரிஷத் (25):சிவசேனா: 0, பா.ஜ.க 17, காங்கிரஸ் 4, தேசியவாத காங்கிரஸ் 1, நவநிர்மாண் சேனா 0 

பிம்பிரி சிஞ்ச்வாட் (128)​: சிவசேனா: 4 பா.ஜ.க: 15, காங்கிரஸ்: 0, தேசியவாத காங்கிரஸ்: 24, நவநிர்மாண் சேனா: 0

 

மகாராஷ்டிர மாநிலத்தில் மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டுவருகின்றன. இதில், மும்பை மாநகராட்சியைப் 

பொருத்தவரையில், இந்த முறை பா.ஜ.க.வும், சிவசேனாவும் தனித்தனியாக போட்டியிட்டன. 

மராட்டிய மாநிலத்தில் மும்பை, தானே, உல்லாஸ்நகர், புனே, பிம்பிரி சிஞ்ச்வாட், சோலாப்பூர், நாசிக், அகோலா, அமராவதி, நாக்பூர் ஆகிய 10 மாநகராட்சிகளுக்கு பிப்ரவரி 

21-ம் தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில் இன்று காலை 10 மணி நிலவரப்படி சிவசேனா 10 வார்டுகளிலும், பா.ஜ.க. 9 வார்டுகளிலும் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் 3 வார்டுகளை வெற்றியை 

நோக்கி முன்னேறியது. அதன்பின்னர் சிவசேனா வேட்பாளர்கள் பெரும்பாலான வார்டுகளில் முன்னிலை பெறத் தொடங்கினர். 11 மணி நிலவரப்படி சிவசேனா 36 

வார்டுகளிலும், பா.ஜ.க. 24 வார்டுகளிலும் முன்னிலை பெற்றனர். காங்கிரஸ்-6, நவநிர்மாண் சேனா-4, தேசியவாத காங்கிரஸ்-2 என முன்னிலை நிலவரம் இருந்தது. நாக்பூரில் 

பா.ஜ.க. 9 வார்டுகளிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும் முன்னிலை பெற்றுள்ளது.

Trending News