INDIA Alliance News: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே எதிர்க்கட்சியான INDIA கூட்டணியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. INDIA கூட்டணி இதனை இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. குறிப்பாக, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமைப் பதவிக்கான மற்றொரு போட்டியாளராக கூறப்பட்டது. ஆனால் இன்றைய கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கூறினார்.
I.N.D.I.A என்றழைக்கப்படும் இந்த கூட்டணி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணியாகும். வரும் மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை (NDA) எதிர்கொள்ளவும், அவர்களை தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தேர்வாவதை தடுக்கவும் இந்த கூட்டணி உருவாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
காணொலி வாயிலாக நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சியை தவிர அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். முந்தைய கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி மற்றும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் பெயரை பரிந்துரைத்தது நினைவுக்கூரத்தக்கது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பல தலைவர்கள் தேசிய அளவில் ஒற்றுமையை உறுதிப்படுத்துவது மற்றும் மாநில அளவிலான பிரச்னைகள் கூட்டணியை சீர்குலைக்க அனுமதிக்காதது குறித்து வலியுறுத்தினர்.
I.N.D.I.A (Indian National Developmental Inclusive Alliance) என்றழைக்கப்படும் இந்த கூட்டணி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணியாகும். வரும் மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை (NDA) எதிர்கொள்ளவும், அவர்களை தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தேர்வாவதை தடுக்கவும் இந்த கூட்டணி உருவாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று மதியம் நடைபெற்ற காணொலி வாயிலான கூட்டத்தில், I.N.D.I.A என்றழைக்கப்படும் இந்த அணியின் தலைவர்கள், தங்களின் தொகுதி பகிர்வுத் திட்டம், பாரத் ஜோடோ நியாய யாத்ரா என்ற காங்கிரஸின் நடைபயணத்தில் கூட்டணி தலைவர்கள் பங்கேற்பது மற்றும் கூட்டணி தொடர்பான பிற பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் மும்பையில் இருந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ஆகியோர் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டனர்.
உத்தரபிரதேசத்தின் சட்டசபை தேர்தலில் எந்த இடங்களையும் பகிர்ந்து கொள்ள மாநில காங்கிரஸ் மறுத்ததால், சமாஜ்வாடி கட்சி அதை மன்னிக்கும் மனநிலையில் இருக்காது என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி மாநிலத்தில் 6 இடங்களுக்கான மத்திய தலைமையின் உறுதிமொழியை மாநில கட்சித் தலைவர் கமல்நாத் ஏற்க மறுத்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆம் ஆத்மி கட்சியுடனான காங்கிரஸ் விவாதமும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. டெல்லியில் 4 இடங்களும், பஞ்சாபில் 7 இடங்களும் வேண்டும் என அக்கட்சி விரும்பினாலும், ஆம் ஆத்மி கட்சி அதற்கு இணங்கத் தயாராக இல்லை. டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களிலும் ஆளும் கட்சி அதிக இடங்களைப் பெற விரும்புகிறது. ஆம் ஆத்மி கட்சி கோவா, ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் போட்டியிட விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ