மாடு கடத்த வந்தார் என சந்தேகப்பட்டு ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வட மாநிலங்களில் நடைபெற்று வருகிற என்பது வேதனையே.
ஒருபுறம் நாடு முழுவதும் குழந்தை கடத்தல் என்ற வதந்தியால், உண்மை தெரியாமல் பலர் சந்தேகத்தின் அடிப்படையில் கொல்லப்பட்டு உள்ளனர். இன்னொரு புறம் மாடு கடத்த வந்ததாக நினைத்து ஒரு கும்பலால் ஒருவர் அடுத்துக் கொல்லப்பட்டு உள்ளார்.
இச்சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அல்வார் மாவட்டத்தில் உள்ள ராம்கர் கிராமத்தில் நேற்று இரவு நடைபெற்று உள்ளது. அந்த பகுதியில் இரண்டு பேர் மாடுகளை ஓட்டிச் சென்றுள்ளனர், அதைப்பார்த்த பொதுமக்கள் திருட வந்ததாக நினைத்தது அவர்களை தாக்கி உள்ளனர். அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இறந்தவரின் பெயர் அக்பர் கான் எனவும், இவர் அரியானாவை சேர்ந்தவர் எனத்தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
We want justice. The culprits should be arrested soon: Suleiman, Father of the man who was allegedly beaten to death by mob in Alwar's Ramgarh last night on suspicion of cow smuggling pic.twitter.com/4VQcks6YT3
— ANI (@ANI) July 21, 2018
எங்களுக்கு நீதி வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என பலியான நபரின் தந்தை சுலைமான் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அல்வர் மாவட்ட நுஹ் பகுதியில் மாட்டு கடத்தல் தொடர்பாக 55 வயதான பால் விவசாயி பெஹ்லு கான் கொடூரமாக தாக்கபட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் கடந்த ஆண்டு 2017 ஏப்ரல் 1 ம் தேதி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.