கோவா முதல்வராக மனோகர் பரிக்கர் தொடருவார் என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்!
கோவா மாநில முதல்வர் மனோகர் பரிக்கர் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது டெல்லி AIIMS மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதன் காரணமாக அரசு சம்மந்தப்பட்ட வேலைகளை அவரால் சரிவர கவனிக்க இயலவில்லை என தெரிவித்து அவர் பதவி விலகுவதாக தெரிவித்தார். இதனையடுத்து கோவாவில் ஆட்சியமைக்க உரிமை கோரி மாநில ஆளுநர் மிருதுளா சின்ஹாவிடம் காங்கிரஸ் தரப்பு எம்.எல்.ஏக்கள் சேர்ந்து மனு அளித்தனர்.
கோவாவில் ஆட்சி மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தற்போது பாஜக தலைவர் அமித்ஷா "கோவா முதல்வராக மனோகர் பரிக்கர் தொடருவார்" என தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...
गोवा प्रदेश भाजपा की कोर टीम के साथ चर्चा कर यह निर्णय लिया गया है कि गोवा के मुख्यमंत्री श्री @manoharparrikar जी ही गोवा सरकार का नेतृत्व करते रहेंगे।
प्रदेश सरकार के मंत्रिमंडल व विभागों में बदलाव शीघ्र ही किया जाएगा।
— Amit Shah (@AmitShah) September 23, 2018
கோவா மாநில பாஜக அணியினருடன் விவாதித்ததில் கோவா முதல்வராக மனோகர் பரிக்கர் தொடருவார் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும் விரைவில் அமைச்சரவை மாற்றம் குறித்து முடிவு எடுக்கப்படும், என குறிப்பிட்டுள்ளார்.
#Goa...
40 தொகுதிகள் கொண்ட கோவா மாநிலத்தில் 16 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், 14 தொகுதிகளில் பா.ஜ.கவும் வெற்றி பெற்றது. தற்போது கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பா.ஜ.க கோவா-வில் ஆட்சி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.