தொழிலாளர்களின் பசி, பட்டினி, நடைபயணம் சிக்கல் தீருமா? மத்திய அரசு அவசர கடிதம்

புலம்பெயர்ந்த தொழிலாளர்ககள் நடைபயணமாக செல்லக்கூடாது. அதை மாநில அரசு தான் உறுதிப்படுத்த வேண்டும் மற்றும் அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கு கடிதம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 16, 2020, 09:44 AM IST
  • தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான வழிகாட்டுதலை வழங்குவது மாநிலங்களின் பொறுப்பாகும்.
  • புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில்களிலோ அல்லது பேருந்துகளிலோ தங்கள் சொந்த இடங்களுக்கு அழைத்துச் செல்ல வசதி செய்ய வேண்டும்.
  • புலம்பெயர்ந்தோர் வீட்டிற்கு நடைபயணமா செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • இந்திய ரயில்வே நாடு முழுவதும் 642 "ஷ்ராமிக் ஸ்பெஷல்" ரயில்களை மே 13 வரை இயக்கியுள்ள
தொழிலாளர்களின் பசி, பட்டினி, நடைபயணம் சிக்கல் தீருமா? மத்திய அரசு அவசர கடிதம் title=

புதுடெல்லி: உள்துறை அமைச்சகம் (Union home ministry) சார்பில் மாநிலங்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அந்த உத்தரவில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் (Migrant Workers) தங்கள் சொந்த மாநிலங்களுக்கு நடைபயணமாக திரும்பிச் செல்லக்கூடாது என்பதை உறுதிப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் (Union home ministry) வெள்ளிக்கிழமை மாநிலங்களுக்கு அறிவுறுத்தியது.

தற்போது இயங்கி வரும் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்து மூலமாக மட்டுமே செல்லுமாறு புலம்பெயர்ந்தோருக்கு தேவையான விழிப்புணர்வு மற்றும் இந்த தகவலை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தி மாநில உள்துறை செயலாளர் அஜய் பல்லா (Ajay Bhalla) கடிதம் எழுதியுள்ளார்.

Read More: 7 வண்ண டோக்கன்கள் அடிப்படையில் இனி மதுபானம் விற்பனை; அசத்தும் TASMAC!

அந்த கடிதத்தில், "புலம்பெயர்ந்தோர் (Migrant Workers) சாலைகளில் நடைப்பயணமாக செல்வதை கண்டால், அவர்களை அருகிலுள்ள முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும். சரியான முறையில் ஆலோசனை வழங்கப்பட வேண்டும். மேலும் அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் (Shramik Special trains) அல்லது பேருந்துகள் மூலம் செல்ல ஏற்பாடு செய்து தர வேண்டும். அதுவரை அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீரை வழங்க வேண்டும் என்று அஜய் பல்லா தனது கடிதத்தில் தெரிவித்தார். 

குடிபெயர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் (Migrant Workers) தங்கள் வீடுகளுக்கு நடைபயணமா திரும்பிச் செல்லும் சம்பவங்கள் நாடு முழுவதும் இன்னும் இருந்துக்கொண்டு தான் இருக்கின்றன.

தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்லத் தயாராக இருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான உதவி மற்றும் அவர்கள் பயணம் செய்து போன்றவற்றை எளிதாக்குவது மாநிலங்களின் பொறுப்பாகும் என்று எம்.எச்.ஏ (MHA) தெரிவித்துள்ளது.

Read More: பொன்மகள் வந்தாள், பெண்குயின் படம் OTT இணையதளத்தில் மே, ஜூன் மாதம் ரிலீஸ்..

நாட்டில் கொரோனா வைரஸ் என்ற அச்சுறுத்தலுக்கு மத்தியில், இந்திய ரயில்வே (Indian Railways) நாடு முழுவதும் 642 "ஷ்ராமிக் ஸ்பெஷல்" ரயில்களை மே 13 வரை இயக்கியுள்ளது. இதன் விளைவாக சுமார் 7.9 லட்சம் பயணிகள் தங்கள் சொந்த மாநிலங்களை அடைந்துள்ளனர் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இவற்றில், உத்தரப்பிரதேசத்தில் (Uttar Pradesh) அதிகபட்ச ரயில்கள் (301) இயக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பீகார் (Bihar) மாநிலத்தில் 169 சிறப்பு ரயில் இயக்கப்பட்டன. 

இந்த மாத தொடக்கத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சகம், தினமும் 100 க்கும் மேற்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் (Shramik Special trains) இயக்கப்படும். அதன் மூலம் மற்ற மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை (Migrant Workers) வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பாடுவார்கள் என அறிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News