அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் 230 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசம் மாநிலத்தில் நவம்பர் 28, 2018 வாக்குப்பதிவு நடைப்பெற்றது. டிசம்பர் 11 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பாஜக, காங்கிரஸ் என இரு கட்சிகளுக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வந்தது. இறுதியாக காங்கிரஸ் கட்சி 114 இடங்களிலும், பாஜகா 109 இடங்களிலும், பிஎஸ்பி 2 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி ஒரு இடத்திலும், மற்றவர்கள் 4 இடங்களில் வெற்றி பெற்றன. ஆனால் ஆட்சி அமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைக்க 116 தொகுதிகள் தேவைப்பட்ட நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதன்மூலம் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தது. .
இன்று மத்தியப் பிரதேச முதலமைச்சராக காங்கிரஸ் தலைவர் கமல்நாத் பதவியேற்றார். இவருக்கு ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இன்று பிற்பகல் 1.30 மணியளவில் போபால் ஜம்பூரி மைதானத்தில் மத்திய பிரதேசம் முதலமைச்சராக பதவியேற்ற கமல்நாத், தனது முதல் கையெழுத்தை விவசாயக்கடன் தள்ளுபடி கோப்புகளில் போட்டார். இது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. கிட்டத்தட்ட சுமார் இறந்சு லட்சம் ரூபாய் வரை விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.
Bhopal: Madhya Pradesh Chief Minister Kamal Nath signs on the files for farm loan waiver pic.twitter.com/NspxMA8Z6i
— ANI (@ANI) December 17, 2018
ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 10 நாட்களில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறிதி காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.