இனி நேபாளம், பூடான் செல்ல ஆதார் அட்டை போதும்!

15 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டகள் நேபாளம் மற்றும் பூடான் செல்வதற்கு ஆதார் அட்டையை பயன்படுத்தி கொள்ளலாம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated: Jan 20, 2019, 07:05 PM IST
இனி நேபாளம், பூடான் செல்ல ஆதார் அட்டை போதும்!

15 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டகள் நேபாளம் மற்றும் பூடான் செல்வதற்கு ஆதார் அட்டையை பயன்படுத்தி கொள்ளலாம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேபாளம், பூடான் செல்லும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை. அவர்கள், இந்திய அரசின் வழங்கிய பாஸ்போர்ட் மற்றும் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை இருந்தால் போதும். 

மேலும் தற்போது வரை 15 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், ரேசன் கார்டு ஆகியவற்றை தான் பயண சான்றாக பயன்படுத்த முடியும். இப்போது ஆதார் அட்டையையும், பயண சான்றாக பயன்படுத்தி கொள்ளலாம். அதேசமயம் மற்ற வயதினர், ஆதார் அடையை  அடையாள அட்டையை பயன்படுத்த முடியாது. 

15 வயது முதல் 18 வயது உடையவர்கள், இந்தியா, நேபாளத்தில் பயணம் மேற்கொள்ள, அவர்கள் படிக்கும் பள்ளி, கல்லூரி முதல்வர்கள் அளிக்கும் அடையாள சான்றை பயன்படுத்தி கொள்ளலாம். 

குடும்பத்தினராக வந்தால் குடும்பத்தில் மூத்தவர்கள் யாரேனும்,  ஒருவரது முறையான சான்று வைத்திருந்தால் போதும். மற்றவர்கள், புகைப்படத்துடன் கூடிய அடையாள சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். 

சுமார் 6 லட்சம் இந்தியர்கள் நேபாளத்தில் வசிப்பது வெளியுறவு அமைச்சகத்தின் புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது. இதில் டாக்டர்கள், பொறியாளர்கள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், கூலி தொழிலாளிகள் அடங்குவர்.

சிக்கிம், மேற்கு வங்கம், பீஹார், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களுடன் நேபாளம் சுமார் 1,850 கி.மீ., தூரம் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது.