இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பாக ராகுல் காந்தி அறிக்கை...

இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பாக ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து 21 எதிர்க்கட்சிகள் சார்பில் கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

Last Updated : Feb 27, 2019, 09:39 PM IST
இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பாக ராகுல் காந்தி அறிக்கை... title=

இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பாக ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து 21 எதிர்க்கட்சிகள் சார்பில் கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானின் அத்துமீறல்களை எதிர்த்தும், காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் தீவிரவாத முகாம்கள் மீது  நேற்று  திடீர் தாக்குதல் நடத்தியது. 

இந்த அதிரடி தாக்குதலில் பாலகோட், சாக்கோட்,  முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் இயங்கி வந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2 பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் உள்ள காஷ்மீரின் நவ்ஷாரா பகுதியில் அத்துமீறி நுழைந்தது.  எல்லை மிறி உள்நுழைந்த விமானத்தில் ஒன்றை நமது வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். அதேசமயம், பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இந்திய போர் விமானங்கள் இரண்டை சுட்டு வீழ்த்தியதாக பாக்கிஸ்தான் இராணுவம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில் பிடிப்பட்ட இந்திய விமானி தன்னுடைய பெயர் மற்றும் விமானப்படையில் தனது பணி அடையாள எண் ஆகியவற்றை அந்நாட்டு அதிகாரிகளிடம் தெரிவிக்கும் காட்சி பதிவாகியுள்ளது. பிடிப்பட்டவர் பெயர் அபிநந்தன் எனவும், அவர் தென் இந்தியாவை சேர்ந்தவர் எனவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதற்கிடையில் பிடிப்பட்டுள்ள இந்திய விமானப்படை விமானியை பத்திரமாக மீட்க வேண்டும் என இந்திய தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பாக ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து 21 எதிர்க்கட்சிகள் சார்பில் கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

டெல்லியில் உள்ள பாராளுமன்ற நூலக அரங்கில் இன்று பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசிப்பதற்காக அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களின் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, புல்வாமாவில் நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலுக்கு இந்த கூட்டத்தில் கண்டனம் பதிவு செய்யப்பட்டதாகவும், இதற்கு பதிலடியாகவும் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பாகவும் ராணுவம் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து 21 எதிர்க்கட்சிகள் சார்பில் கூட்டாக அறிக்கை வெளியிடப்பட்டதாகவும்  தெரிவித்துள்ளார்.

Trending News