புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சனிக்கிழமை (மே 15, 2021) ஒரு செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். இதில் அவர் சில முக்கிய விவரங்களை பகிர்ந்து கொண்டார். கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 6,500 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நேர்மறை விகிதம் இப்போது 11 சதவீதமாகக் குறைந்துவிட்டதாகவும் அவர் அறிவித்தார்.
"கடந்த 24 மணி நேரத்தில், டெல்லியில் 6500 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேர்மறை விகிதம் மேலும் 11% ஆக குறைந்துள்ளது. எனவே கொரோனாவின் தாக்கம் டெல்லியில் குறைந்து வருகிறது. 15 நாட்களுக்குள் 1000 ஐ.சி.யூ படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. எங்கள் மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் இக்கட்டான காலத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணத்தை அளித்துள்ளனர். நான் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்," என்று டெல்லி முதல்வர் கூறினார்.
டெல்லியில் ஆக்ஸிஜன் (Oxygen) நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்காக, அரசாங்கம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆக்ஸிஜன் செறிவு வங்கிகளை அமைத்து, COVID-19 நோயாளிகளுக்கு வீட்டு வாசலில் ஆக்ஸிஜனை வழங்குவதாக உறுதியளித்ததாகவும் டெல்லி முதல்வர் குறிப்பிட்டார்.
"இன்று முதல், நாங்கள் ஒரு மிக முக்கியமான சேவையைத் தொடங்குகிறோம். நாங்கள் ஆக்ஸிஜன் செறிவு வங்கிகளைத் தொடங்குகிறோம். COVID 19 நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் ஆக்ஸிஜனை வழங்குவது அவசியம். இதுபோன்ற நோயாளிகளுக்காக இதை நாங்கள் தொடங்கியுள்ளோம்” என்றார் அரவிந்த் கெஜ்ரிவால்.
"ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்ற 200 வங்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைப்பட்டால், வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும் நோயாளிகளின் வீட்டு வாசலில் எங்கள் குழு ஆக்சிஜன் கான்சென்டிரேட்டர்களை வழங்கும்" என்று கெஜ்ரிவால் மேலும் தெரிவித்தார்.
நோயாளிகள் குணமானவுடன் , ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் அவர்களிடமிருந்து திரும்பப் பெறப்பட்டு, அடுத்த நோயாளிகளுக்கு ஒதுக்கப்படுவதற்கு முன்பு அவை முறையாக சுத்திகரிக்கப்படும்.
"COVID-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு, எங்கள் வீட்டு தனிமைக் குழுவின் ஒரு பகுதியாக இல்லாத நோயாளிகள், 1031 என்ற எண்ணை அழைத்து தங்களை இந்த குழுவில் இணைத்துக் கொள்ளலாம். பின்னர் அவர்களும் மேற்கூறிய சேவையைப் பெற முடியும். இருப்பினும், ஆக்சிஜன் செறிவூட்டிகளைக் கோரும் நோயாளிகளுக்கு உண்மையிலேயே அவை தேவைப்படுகின்றனவா என்பதை மருத்துவர்களின் ஒரு குழு உறுதி செய்யும். " என்று கெஜ்ரிவால் கூறினார்.
முன்னதாக, கொரோனா தொற்று காரணமாக ஒரு குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் உயிர் இழந்தால், அக்குடும்பத்துக்கு ஆஆப் அரசாங்கம் நிதி உதவி அளிக்கும் என்ற மிகப்பெரிய அறிவிப்பை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) வெள்ளிக்கிழமை வெளியிட்டார். பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி மற்றும் வளர்ப்புக்கான செலவை அரசாங்கம் ஏற்கும் என்றும் டெல்லி முதல்வர் கூறினார்.
ALSO READ: 2 மாதங்களுக்கு இலவச ரேஷன்-டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்: Lockdown நீடிக்குமா?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR