அபிநந்தன் விடுவிக்கப்பட்டது ஏன்... உண்மையை அம்பலப்படுத்திய பாகிஸ்தான் எம்பி...!!!

அபிநந்தன் வர்த்தமானன்.. இந்த பெயரை இந்தியர் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

Written by - ZEE Bureau | Last Updated : Oct 29, 2020, 01:12 PM IST
  • அபிநந்தன் வர்த்தமானன்.. இந்த பெயரை இந்தியர் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.
  • கடந்த ஆண்டு பிப்ரவரி காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர்.
  • இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தான் மீது வான் வழி தாக்குதலை நடத்தியது.
அபிநந்தன் விடுவிக்கப்பட்டது ஏன்... உண்மையை  அம்பலப்படுத்திய பாகிஸ்தான் எம்பி...!!!

அபிநந்தன் வர்த்தமானன்.. இந்த பெயரை இந்தியர் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை.

கடந்த ஆண்டு பிப்ரவரி காஷ்மீரில் உள்ள புல்வாமாவில் (Pulwama) நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை (IAF) பாகிஸ்தான் மீது வான் வழி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல், இந்தியா மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளுக்காக பயிற்சி முகாம் நடத்தி வந்த ஜெய்ஷ்-ஈ முகம்மது பயங்கரவாத அமைப்பின் முகாம்கள் அழிக்கப்பட்டன, அதில் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான்(PAKISTAN), விமான படை இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தன. அதனை விரட்டிச் சென்ற இந்திய படையின் போர் விமானம் பாகிஸ்தானின் F-16 ரக போர் விமானத்தை வீழ்த்தியது. ஆனால், இந்த தாக்குதலில், இந்திய விமான படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமானனை பாகிஸ்தான் தரப்பினர், பிடித்து விட்டனர். 

ஆனால், இந்தியா அபிநந்தன் வர்த்தமானனை (Abhinandan Varthaman) வெற்றிகரமாக மீட்டது. அவர் கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி, அட்டாரி-வாகா எல்லையில், இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த நிலையில், எதிர்கட்சிகள் உட்பட பலர், பாகிஸ்தான் ஏதோ, பெருந்தன்மையோடு விட்டு விட்டதாக கூறினர். 

இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினரும்,  பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கின் தலைவரும் ஆன அயாஸ் சாதிக் உண்மையை போட்டு உடைத்துள்ளார்.

ALSO READ | இந்தியாவிற்கு சௌதி அரேபியா அளித்த Diwali gift: Pok, GB Pak map-ல் இருந்து நீக்கம்!!

அவர் நாடாளுமன்றத்தில் பேசிய போது , “ இந்திய விமான படையின் விங் கமாண்டர் அபிநந்தன் பிடிப்பட்ட போது, பாகிஸ்தானில் உயர் மட்ட கூட்டம் நடைபெற்றது. அப்போதும் ஷா முக்கமது குரேஷி, கூட்டத்தில் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் இம்ரான் பங்கேற்க கூட இல்லை. அப்போது அறைக்குள், ராணுவ தலைவர் நுழைந்த போது, அவரது கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. வியர்த்திருந்தார். தயவு செய்து அபிநந்தனை விடுவித்து விடுங்கள். இல்லை என்றால், இந்தியா இரவு 9 மணிக்கு தாக்குதல் நடத்தும் என கூறினார். அந்த காட்சி இன்னும் எனக்கு நினைவில் உள்ளது எனக் கூறினார்.

ALSO READ |  பாகிஸ்தானில் வலுக்கும் தனி பலுசிஸ்தான் போராட்டம்.. சீனாவிற்கு தலைவலியை கொடுப்பது ஏன்.!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News