மக்களுக்கு தீபாவளி பரிசாக மத்திய அரசு, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதை அடுத்து பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 10 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து பாஜக ஆளும் அஸ்ஸாம், திரிபுரா,மணிப்பூர், கர்நாடகா, கோவா, உ.பி, குஜராத், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தர்கண்ட் மாநிலங்கள் வாட் (VAT) வரியை குறைத்துள்ளன. மாநிலங்களும் பெட்ரோல் டீசல் மீதான மாநில வரியான வாட் வரியை குறைத்ததால், அந்த மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலைகள் மேலும் குறைந்தன.
ALSO READ: Edible Oil Price: பண்டிகை காலத்தில் பளிச் செய்தி, சமையல் எண்ணெய் விலை குறைந்தது
புதுச்சேரி மாநிலத்திலும் அரசு தீபாவளி பரிசாக வாட்வரியை குறைத்துள்ளதால் பெட்ரோல் விலை ரூ.13 என்ற அளவிற்கும், டீசல் விலை ரூ.19 என்ற அளவிலும் குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
இந்நிலையில், பஞ்சாபில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை முறையே லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும் குறைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் முறையே லிட்டருக்கு ரூ.10 மற்றும் லிட்டருக்கு ரூ.5 குறைக்க முடிவு செய்துள்ளோம் என்று சரண்ஜித் சிங் சன்னி செய்தி நிறுவனமான ANI யிடம் தெரிவித்தார்.
ALSO READ: உச்சம் தொடும் காய்கறி விலை; இன்றைய விலை என்ன
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR