பெட்ரோல் விலை விரைவில் ரூ.100 எட்டும் - அந்திரா முதல்வர்!

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வரும் நிலையில், கூடிய விரைவில் பெட்ரோல் விலை ரூ.100 வரை செல்ல வாய்ப்புள்ளது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்!

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Sep 4, 2018, 05:03 PM IST
பெட்ரோல் விலை விரைவில் ரூ.100 எட்டும் - அந்திரா முதல்வர்!

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வரும் நிலையில், கூடிய விரைவில் பெட்ரோல் விலை ரூ.100 வரை செல்ல வாய்ப்புள்ளது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்!

பெட்ரோல் விலை உச்சத்தை தொடும் அதே வேலையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 100-ஆக வீழ்ச்சியடைந்தாலும் வாய்ப்பில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82.41 ஆகவும், டீசல் விலை ரூ.75.39 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தினம் தினம் தொடர்ந்து கச்சா எண்னெய் விலை உயர்ந்து வரும் பட்சத்தில் கூடிய விரைவில் பெட்ரோல் விரை ரூ.100-யை தொடும் என இன்று அமராவதியில் செய்தியாளர்களை சந்தித்த ஆந்திர முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு திட்டத்தினை ஆளும் பாஜக அரசினால் திறம்பட செயல்படுத்த இயலவில்லை என குற்றம் சாட்டிய அவர் இந்தியாவில் தற்போது நிலவும் பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் இந்தியாவின் பலமே தவிர தேசிய ஜனநாயக கூட்டணி இல்லை எனவும் அவர் சாடியுள்ளார்.

இந்த பணமதிப்பிழப்பு செயல்பாட்டினால் பொதுமக்கள் இன்றளவிலும் துயரம் அனுபவித்து வருகின்றனர். நாட்டின் பல மாநிலங்களில் இன்றும் பொதுமக்கள் பணத்தட்டுப்பாட்டில் சிக்கி தவித்து வருகின்றனர். பணபறிமாற்றம் முறையினை முழுவதுமாக டிஜிட்டல் மயமாக மாற்றினாலும் குழப்பங்கள் இல்லை, ஆனால் டிஜிட்டல் பணத்தினையும், நடைமுறை பணத்தினையும் சரியாக சமநிலையினை கொண்டிருத்தல் அவசியம் ஆகும். இந்த முயற்சியில் நிச்சையம் பாஜக தோல்வியை மட்டும் சந்திக்கும்.

மத்திய அரசின் இந்த தவறான கொள்கையால் கடந்த 1½ ஆண்டுகளாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்!