மாதாந்திரம் வானொலி மூலமாக மக்களிடையே, பிரதமர் மோடி "மன் கி பாத்" நிகழ்ச்சியில் உரையாற்றுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடத்தின் முதல் மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று பிரதமர் மோடி வானொலி மூலமாக மக்களிடையே உரையாற்றினார். இன்று அவர் பேசியதாவது:-
> குடியரசு தினத்தில் 10 ஆசியான் நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்திய வரலாற்றில் முதல் முறையாக 10 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டது முதல்முறையாகும்.
> உலகம் முழுதும் அனைத்து பெண்களுக்கும் கல்பனா சாவ்லா முன்மாதிரியாக உள்ளார். பெண்கள் பல துறைகளில் முன்னேற்றமடைந்துள்ளனர். தலைவர்களாக உருவெடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் பெண் சாதனையாளர்களை ஜனாதிபதி சந்தித்து பேசினார். பெண்களை மதிப்பது நமது கலாசாரம். பெண்கள் சக்தி, நாட்டிலும், சமூகத்திலும் நிறைய நேர்மறையான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அவர்களின் பங்களிப்பு, உலகத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
> விமானபடையை சேர்ந்த பாவனா காந்த், மோகனா சிங் மற்றும் அவானி சதுர்வேதி ஆகியோர் சுகோய் 30 போர் விமானத்தில் பறக்க பயிற்சி பெற்று வருகின்றனர். அனைத்து உயர் அதிகாரிகளும் பெண்கள் தான். இது பாராட்டுக்கூரியது.
> நாட்டில், சில இடங்களில் சமூகத்திற்கு எதிராக கொடுஞ்செயல்கள் நடக்கின்றன. இதனை அகற்றும் வகையில் பீகாரில் 13,000 கி.மீ., தூரத்திற்கு மனித சங்கிலி நடத்தப்பட்டது.
> சத்தீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா பகுதி பெண்களை பாராட்டுகின்றேன். நக்சலைட் ஆதிக்க பகுதியில் பெண்கள் மின்னணு ரிக்சாக்களை இயக்குகின்றனர். இதன் மூலம் பல வாய்ப்புகளை உருவாக்குவதுடன், அந்த பகுதியை மாற்றும், சுற்றுச்சூழல் உகந்தது.
> பத்ம விருது பெற்ற அரவிந்த் குப்தாஜியை அனைவரும் கேள்விபட்டிருப்பீர்கள். அவர் கழிவிலிருந்து குழந்தைகளுக்கு பொம்மை தயாரித்தார்.
> பத்ம விருது பட்டியலை பார்த்தவுடன் நீங்கள் பெருமையடைந்திருப்பீர்கள். பெரிய நகரங்களில் வசிப்பவர்களை நாங்கள் கவுரவபடுத்தவில்லை. சமூகத்திற்காக பணியாற்றியவர்களை பெருமைபடுத்துகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.