பிரதமருடன் ஆர்.பி.ஐ., கவர்னர் சந்திப்பு - உர்சித் படேல் ராஜினமா இல்லை

பிரதமர் மற்றும் ஆர்.பி.ஐ., கவர்னர் சந்திப்புக்கு பிறகு ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து செல்ல முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 15, 2018, 03:16 PM IST
பிரதமருடன் ஆர்.பி.ஐ., கவர்னர் சந்திப்பு - உர்சித் படேல் ராஜினமா இல்லை title=

மத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) இடையிலான விவாதம் தற்போதைய முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நவம்பர் 19 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.பி.ஐ மத்திய குழு கூட்டத்திற்கு இந்த பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைக்கப்படும் எனத் தெரிகிறது. தற்போது கிடைத்த தகவல்படி, ரிசர்வ் வங்கியுடன் மத்திய அரசு மென்மையாநா நிலைப்பாட்டை கடைபிடிக்கும் என ஆதாரங்கள் கூறுகின்றன. அதே நேரத்தில், சட்டத்தின் பிரிவு 7-ஐ மத்திய அரசு பயன்படுத்தாது எனத் தெரிகிறது. சமீபத்தில், ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜீத் பட்டேல் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்திருந்தார். இந்த சந்திப்பில் பல பிரச்சனைகளை குறித்து விவாதிக்கப்பட்டது. ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து செல்ல முடிவு செய்துள்ளதாகவும் வலைத்தள www.zeebiz.com/hindi ஆதாரங்கள்படி தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சந்திப்பிற்கு பிறகு மத்திய அரசு மற்றும் ஆர்பிஐ இடையே சுமூகமான்; பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிட்டன என்ற ஊகங்கள் கூறுகின்றன. 

முன்னதாக, மத்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுனர் விரால் ஆச்சார்யா மத்திய வங்கிகளின் தன்னாட்சி நிர்வாகம் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து தெரிவித்தார். இதையடுத்து, மத்திய நிதியமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி இடையே பிரச்னை உருவாக தொடங்கியது.

இதைத்தொடர்ந்து, ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 7-ஐ பயன்படுத்தி ரிசர்வ் வங்கியுடன் நிதி அமைச்சகம் ஆலோசனை நடத்த தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் ரிசர்வ் வங்கி ஆளுனர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்ய போவதாக தகவல்கள் செய்திகள் வெளியாகின. இவை ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகம் இடையிலான பிரச்னையை வலுப்படுத்தியது.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுனர் உர்ஜித் படேல் தலைமையில், ஆர்.பி.ஐ மத்திய குழுவின் கூட்டம் வரும் நவம்பர் 19ம் தேதி மும்பையில் கூட உள்ளது. இதில் மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் உட்பட 18 பேர் பங்கேற்க உள்ளனர். 

Trending News