திக்விஜய்-ன் செயல்பாடு அவரது அகந்தையை காட்டுகிறது -மோடி!

தனது வாக்கை பதிவு செய்யாமல் திக்விஜய் சிங் புரக்கனித்துள்ள விஷயம் காங்கிரஸ் கட்சியினரின் அகந்தையை வெளிக்காட்டுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!

Last Updated : May 13, 2019, 04:20 PM IST
திக்விஜய்-ன் செயல்பாடு அவரது அகந்தையை காட்டுகிறது -மோடி! title=

தனது வாக்கை பதிவு செய்யாமல் திக்விஜய் சிங் புரக்கனித்துள்ள விஷயம் காங்கிரஸ் கட்சியினரின் அகந்தையை வெளிக்காட்டுகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்!

மத்திய பிரதேச மாநிலம் போபால் மக்களவை தொகுதியில் காங்., சார்பில் போட்டியிடும் திக்விஜய் சிங், வாக்களிக்காமல் தவிர்த்துள்ளார்.   ராஜ்கர் தொகுதியில் ஏற்கனவே 2 முறை வெற்றி பெற்ற திக்விஜய் சிங்கிற்கு, ராஜ்கர் பகுதியில் ஓட்டு இருந்தும் நேற்று நடைபெற்ற 6-ஆம் கட்ட மக்களவை தேர்தலில் வாக்களிக்காமல் நாள் முழுவதும் போபாலிலேயே இருந்தார் திக்விஜய் சிங்.

போபாலில் தன்னை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிடும் பிரக்யா தாக்கூரும் பயந்து தான் திக்விஜய் சிங் வாக்களித்த தவிர்த்துள்ளார் என பாஜக-வினர் விமர்சித்து வருகின்றனர். 

இதற்கிடையில் பாஜக-வின் அமித் மாலி தெரிவிக்கையில்., "ராஜ்கர் தொகுதிக்கு செல்ல பயந்து தான் திக்விஜய் சிங், தனக்கே ஓட்டளிக்க கூட செல்லாமல் போபாலிலேயே இருந்து விட்டார். 2 முறை முதல்வராக இருந்தவர் பிரக்யா தாக்கூரின் போட்டியை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றார்" என கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி., "திக் விஜய் சிங் வாக்களிக்காமல் இருப்பது காங்கிரஸ் கட்சியின் அகங்காரத்தை வெளிக்காட்டுகிறது. ஜனநாயக உரிமையினை நிலைநாட்ட நான் அகமதாபாத் வரை சென்று வாக்களித்தேன்., ஆனால் திக் விஜய் சிங் தனது நலனை மட்டும் எதிர்பார்த்து மக்கள் நலனை புரம் தள்ளியுள்ளார். தனது வாக்கினை கூட அளிக்காமல் மக்களுக்கு ஒரு தவறான எடுத்துகாட்டாய் அமைந்துள்ளார் திக் விஜய் சிங்" என குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து திக்விஜய் சிங்கிடம் கேட்ட போது, போபாலில் ஓட்டுப்பதிவு நடைபெற்றதால் அதை கவனிப்பதில் பிசியாக இருந்ததால் ஓட்டுப் போட என்னால் செல்ல முடியவில்லை. பாஜக சொல்வது போல் எனக்கு பயம் என்பது கிடையவே கிடையாது. தொகுதியில் மக்களின் வரவேற்பு சிறப்பாக உள்ளது. சட்டசபை தேர்தலை போல் இதிலும் மக்கள் என்னை தேர்வு செய்வார்கள் என 100% நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.

Trending News