புதுடெல்லி: கடந்த நவம்பர் 8-ம் தேதி ரூ.500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இந்நிலையில் ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்பாக பிரதமர் மோடி, வரும் 31-ம் தேதி இரவு 7.30 மணியளவில் பேச உள்ளார்.
குறிப்பாக, ரூ.500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு நாளையுடன் 50 நாள் முடிவுக்கு வருகிறது.
ஊழலுக்கு எதிரான தனது போரட்டத்தில் மக்கள் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் இத்தகைய குறுகிய கால வலி நீண்ட நாள் பயனளிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். இந்த நிலையில், புத்தாண்டுக்கு முன் ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நாளை மறுநாளுடன் முடிவடைய உள்ளதால், பணம் எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.