காந்தியவாதி ஹெகோதோ-வின் போராட்டத்தில் நடிகரை பிரகாஷ்ராஜ்!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், கையால் தயாரிக்கப்படும் பெருட்களுக்கு பூஜ்ய வரி விதிக்க வேண்டும் என கோரி காந்தியவாதி பிரசன்னா ஹெகோதோ, சாகும் வரை உண்ணா விரதம் அறிவித்து மேற்கொண்டு வருகிறார்.

Updated: Oct 18, 2017, 03:27 PM IST
காந்தியவாதி ஹெகோதோ-வின் போராட்டத்தில் நடிகரை பிரகாஷ்ராஜ்!
Pic Courtesy: @ANI

கர்நாடகா: கர்நாடக மாநிலம் பெங்களூருவில், கையால் தயாரிக்கப்படும் பெருட்களுக்கு பூஜ்ய வரி விதிக்க வேண்டும் என கோரி காந்தியவாதி பிரசன்னா ஹெகோதோ, சாகும் வரை உண்ணா விரதம் அறிவித்து மேற்கொண்டு வருகிறார்.

இந்த போராட்டத்தின் நான்காம் நாளான இன்று, அவருக்கு ஆதரவாக தென்னிந்திய திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ் அவரது போராட்டத்தினில் பங்கேற்றுள்ளார்.

முன்னதாக நேற்று (செவ்வாய்) அன்று பெல்களூருவின் பசுவானகுடியில் உள்ள நிது மமடி மட்டில் நிருபர்களிடம் பிரசன்னா உரையாற்றுகையில்; கிராம் சேவா சங்கத்தின் மூலம் சுமார் 200 வகையான கைத்தறி மற்றும் காதி பொருட்கள் தயாரிக்கப் பட்டு வருகின்றன. 

இந்த பொருட்களின் பட்டியல் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மற்றும் இப்பொருட்களுக்கு முழுமையான சேவைவரி விலக்கு வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள் என தெரிவித்தார்!