புது டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) இந்த மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் (Galwan Valley) சீனாவுடனான எல்லை மோதல் தொடர்பாக மத்திய அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து தனது கேள்விகள் மூலம் தாக்குதலை மேற்கொண்டு வருகிறார். இந்திய வீரர்கள் மரணம் மற்றும் எல்லையில் ஏற்பட்ட மோதலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) பேச என்று மீண்டும் வலியுறுத்தினார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி (Former Congress President Rahul Gandhi), ஜூன் 15 முதல் கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையே வன்முறை மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதுக்குறித்து மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? மேலும் இந்திய நிலங்கள் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதா என்றும் மோடி அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.
"சில நாட்களுக்கு முன்பு, எங்கள் பிரதமர் (Prime Minister) ஒரு அங்குல இந்திய நிலம் கூட யாராலும் எடுக்கப்படவில்லை, இந்தியாவின் எல்லைக்குள் யாரும் நுழையவில்லை என்று கூறியிருந்தார். ஆனால் நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், மக்கள் இதைப் பற்றி பேசுகிறார்கள், செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன, லடாக்கின் குடியிருப்பாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ தளபதிகள் சீனா எங்கள் நிலத்தை பறித்ததாக கூறுகிறார்கள். சீனா எங்கள் நிலத்தை ஒரே இடத்தில் மட்டுமல்ல, மூன்று பகுதிகளிலும் பறித்துவிட்டது" என்று ராகுல் காந்தி கூறினார்.
அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ் (Congress) கேள்வி எழுப்பிய போது, பிரதமர் மோடி "நமது எல்லைக்குள் யாரும் நுழையவில்லை, தற்போது நமது எல்லைக்குள் யாரும் இல்லை, நமது பகுதிகளை யாரும் ஆக்கிரமிக்கவில்லை" எனக் கூறினார்.
ஆனால் "பிரதமர் ஜி, நீங்கள் உண்மையை பேச வேண்டும், நாட்டிற்கு சொல்ல வேண்டும். நாட்டின் எந்த நிலமும் ஆக்கரிமிக்கவில்லை என்று நீங்கள் கூறுவதில் உண்மை இல்லையென்றால், அது சீனாவுக்கு ஆதாயமாக இருக்கும்" என்று அவர் கூறினார்.
"நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து போரிட்டு அவர்களை தூக்கி எறிய வேண்டும். ஆதற்கு நீங்கள், ஆம், சீனா நமது நிலத்தை கையகப்படுத்தியுள்ளது. நாங்கள் நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்று பயப்படாமல் நீங்கள் உண்மையை பேச வேண்டியிருக்கும். முழு நாடும் உங்களுக்கு ஆதரவாக நிற்கும்" என்றார்.
ராகுல் காந்தியின் அடுத்த கேள்வி எல்லையில் உள்ள வீரர்களைப் பற்றியது.
"எங்கள் துணிச்சலான வீரர்களை ஆயுதங்கள் இல்லாமல் அனுப்பியது யார், ஏன்?" என அவர் கேட்டார்.
எல்லைப் பிரச்சினை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உரையாற்றிய அதே நேரத்தில் ராகுல் காந்தியின் கருத்துக்கள் வந்தன.
"சீனா ஊடுருவவில்லை என்று பிரதமர் கூறுகிறார். ஆனால் மறுபுறம், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளிவிவகார அமைச்சகம் சீனர்களின் பெரிய இருப்பு மற்றும் ஊடுருவல்களைப் பற்றி விவாதித்து வருகின்றன" என்று சோனியா காந்தி (Sonia Gandhi) கூறினார்.
"இன்று, நாங்கள் எங்கள் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் போது, பிரதமர் கூறியது போல, லடாக்கில் எங்கள் நிலத்தை சீனா கைப்பற்றவில்லையா என்பதை நாடு அறிய விரும்புகிறது, பின்னர் ஏன் நமது 20 வீரர்கள் இறந்தார்கள் மற்றும் அதற்கான காரணம் என்ன? என்று அவர் கேள்வி எழுப்பினார்.