டேராடூன்: பிரதமர் மோடி அவர்கள், இன்று(வெள்ளி) காலை உத்தரகாண்டின் டேராடூன்-க்கு சென்றுள்ளார். உத்தரகண்ட் மாநில ஆளுநர் கே.கே.பால் மற்றும் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ஆகியோர் பிரதமரை காலை வரவேற்றனர்.
இதனையடுத்து பிரதமர் கேதார்நாத் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார். பிரதருடன் ஆளுநர் கே.கே.பால், முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ஆகியோர் இவ்வழிபாட்டிற்கு சென்றனர்!
பிரதமர் வருகையையொட்டி டேராடூன், கேதார்நாத் ஆகிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் வருகையாளும், தீபாவளிப் பண்டிகையாளும், கேதார்நாத் கோயில் பூக்களால் அலங்கரிக்க பட்டுள்ளது.
#Uttarakhand: PM Narendra Modi offers prayers at Kedarnath Temple pic.twitter.com/koGvtrTfGs
— ANI (@ANI) October 20, 2017
கடந்த ஐந்து மாதங்களுக்குள், பிரதமர் நரேந்திர மோடி இக்கோவிலுக்கு செல்வது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், இந்திய இராணுவம் மற்றும் பி.எஸ்.எப் படையினருடன், பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளியை கொண்டாடினார். பின்னர் இன்று கேதார்நாத் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார்!