BJP-க்கு உதவுவதற்கு பதில் செத்து மடியலாம் -பிரியங்கா தாக்கு!

பாஜக-விற்கு உதவுவதற்கு பதில் செத்து மடியலாம் என உத்திரபிரதேச மாநில காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்!

Last Updated : May 2, 2019, 04:20 PM IST
BJP-க்கு உதவுவதற்கு பதில் செத்து மடியலாம் -பிரியங்கா தாக்கு! title=

பாஜக-விற்கு உதவுவதற்கு பதில் செத்து மடியலாம் என உத்திரபிரதேச மாநில காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்!

நடைப்பெற்று வரும் மக்களவை தேர்தலுக்கான தீவிர பிரச்சாரத்தில் குதித்திருக்கும் பிரியங்கா காந்தி இன்று பாஜக-வின் ‘பலமில்லா காங்கிரஸ் வேட்பாளர்’ என்னும் கருத்திற்கு பதில் அளிக்கும் விதமாக பாஜக-விற்கு உதவுவதற்கு பதில் செத்து மடியலாம் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக பாஜக-வினர் தங்களது பிரச்சாரத்தின் போது காங்கிர்ரஸ் கட்சி பலமில்லா வேட்பாளரை களமிறக்கியுள்ளது என விமர்சித்தனர். பாஜக-வின் இந்த கருத்திற்கு பதில் அளித்த பிரியங்கா காந்தி இன்று "2019 மக்களவை தேர்தல் ஆனது வாழ்வா சாவா என்பது போன்றது, எங்களது பலமில்லா வேட்பாளர் பாஜக-வின் ஓட்டு வங்கியை சிதைப்பார். மக்களின் மீது அக்கரை காட்டதா பாஜக-விற்கு வாக்களித்து உதவுவதற்கு பதிலாக செத்து மடியலாம்" என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் மாநிலத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தங்களது சொந்த பலத்திலேயே நிற்கின்றனர். மற்ற கட்சியினரின் ஆதரவோடு நிற்கவில்லை. எங்களது காங்கிரஸ் வேட்பாளர்கள் பலத்தினை தேர்தல் முடிவின் போது வெளிப்படுத்துவர். ஒன்று வென்றார்கள் இல்லை பாஜக-வின் ஓட்டை சிதைத்தார்கள் என்ற பெருமையினை பெருவர் எனவும் பிரியங்கா தெரிவித்தார். 

மேலும் பாஜக-காங்கிரஸ் கட்சிகள் ஒன்றுபட்ட கட்சி இல்லை என தெரிவித்த பிரியங்கா இரண்டு கட்சிகளின் கொள்கை, சித்தாந்தங்கள் வேறு வேறு என தெளிவு படுத்தினார். முன்னதாக பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் ஒன்று தான் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மயாவதி தெரிவித்திருந்தார். மாயாவதியின் கருத்திற்கு பதில் அளிக்கும் வகையில் பிரியங்கா இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மாயாவதி தனது பிரச்சார கூட்டத்தில் பேசிய போது " காங்கிரஸ் மற்றும் பாஜக இரண்டுமே ஒரே துணியில் கிழிக்கப்பட்ட இரு துண்டுகள். முன்பு இருவரும் ஒன்றினைந்து மக்களை ஏமாற்றி வந்தனர், தற்போது எதிரிகள் போல் நடித்து மக்களை ஏமாற்ற வந்துள்ளனர்" என தெரிவித்திருந்தார். மேலும் பாராளுமன்றத்தில் பிரதமர் மோடியை ராகுல் காந்தி கட்டிப்பிடித்ததில் இருந்தே இருவரும் கூட்டணியில் தான் இருக்கின்றனர் என்பது நமக்கு தெரிகிறது என கடுமையாக சாடினார். மாயாவதியின் இந்த கருத்திற்கு பதில் அளிக்கும் வகையில் பிரியங்கா இவ்வாறு விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News