ரபேல் விமானக் கொள்முதலில் சந்தேகமில்லை - மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

ரபேல் போர் விமான பேரம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 14, 2018, 12:27 PM IST
ரபேல் விமானக் கொள்முதலில் சந்தேகமில்லை - மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் title=

ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்க இந்தியா, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வந்தது.

இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்த வந்த நிலையில், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா ரபேல் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவரைத்தொடர்ந்து வழக்கறிஞர் வினீத் தண்டா என்பவரும் ரபேல் போர் விமான பேரம் குறித்து நீதிமன்ற கண்காணிப்புடன் கூடிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்தார். ஆம் ஆத்மி பிரமுகர் சஞ்சய் சிங்கும் வழக்கு தொடர்ந்தார். அவர்களை அடுத்து முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யுமாறு CBI-க்கு உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. விசாரணை முடிந்த நிலையில், கடந்த மாதம் 14-ஆம் நாள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில், தலைமை நீதிபதி அமர்வு, இம்மனுக்கள் மீதான் விசாரணை இன்று வந்தது. 

அப்பொழுது ரஃபேல் போர் விமானம் வாங்கும் மத்திய அரசின் கொள்கை முடிவு சரியானது தான். அதில் எந்தவிதமான சந்தேகமும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. போர்விமானங்களின் விலையை ஒப்பிட்டுப் பார்த்து விசாரிப்பது நீதிமன்றத்தின் பணி அல்ல. எனவே ரஃபேல் போர்விமானங்கள் கொள்முதலில் விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை, விசாரணை கோரிய மனுக்களைத் தள்ளுபடி செய்கிறோம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Trending News