ரஃபேல் விவகாரத்தில் பிரதமரை திருடன் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரையை தீவிரப்படுத்தும் நோக்கிலேயே கூறினேன்; அதற்கு வருத்தம் தெரிவித்து கொள்வதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்!!
கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பிரான்சிடம் இருந்து, ரஃபேல் போர் விமானங்களை வாங்க, ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு குறித்த காங்கிரஸ் காட்சியின் புகாருக்கு பாஜக தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, மோடியை திருடன் என்று உச்சநீதிமன்றமே சொல்லிவிட்டது என்றார். ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவில் இல்லாத விஷயத்தை பேசியதன் மூலமாக, நீதிமன்றத்தை ராகுல் காந்தி அவமதித்துவிட்டார் என்று பாஜக குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் மீனாட்சி லேகி உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து, இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுல் காந்தி கூறிய கருத்துக்களை ஒருபோதும் நீதிமன்றம் கூறவில்லை, அட்டர்னி ஜெனரல் ஆட்சேபம் தெரிவித்த குறிப்பிட்ட சில ஆவணங்களை சட்டரீதியாக ஏற்கலாம் என்றுதான் தெரிவித்தோம். ராகுல் காந்தி தனதுபேச்சுக்குக்கு உரிய விளக்கத்தை வரும் 22 ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என நோடீஸ் அனுப்பியது.
Congress President Rahul Gandhi says "he regretted that he gave the statement" (on Rafale verdict), in his reply to the Supreme Court on contempt petition filed by Meenakshi Lekhi https://t.co/Hpjovr3srV
— ANI (@ANI) April 22, 2019
இதையடுத்து, தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ள ராகுல் காந்தி, உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில், ரபேல் விவகாரத்தில் பிரதமரை திருடன் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டதாக பிரசாரத்தை தீவிரப்படுத்தும் நோக்கிலேயே கூறினேன்; அதற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.