காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் 10 நாளில் விவசாய கடன்கள் தள்ளுபடி: ராகுல் காந்தி

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 29, 2018, 05:47 PM IST
காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் 10 நாளில் விவசாய கடன்கள் தள்ளுபடி: ராகுல் காந்தி title=

அடுத்த மாதம் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பாஜக, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக மத்தியப் பிரதேச மாநிலத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக, அந்தமாநிலத்தில் உள்ள உஜ்ஜயினியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். காலையில் அந்த பகுதிக்கு வந்தவுடன், முதலில் அங்கு உள்ள மஹாகாளேஸ்வர் கோவிலுக்குச் சென்று வழிபாட்டார். 

பின்னர் தேர்தல் பேரணியில் கலந்துக்கொண்டு பேசினார் ராகுல்காந்தி. அப்பொழுது அவர் கூறியதாவது, மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஆட்சி அமைத்த 10 நாட்களில் அனைத்து விதமான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும். மேலும் ஒரு விவசாயி மண்டியில் போய் பொருளை எடை போட நினைத்தால் எடை போடப்படுவதில்லை. நியாயமான விலை கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு மாதம் கழித்து தான் பணம் கிடைக்கிறது. விவசாயிகளுக்கு போனஸ் கிடைப்பதில்லை. காப்பீடு பணம் கிடைப்பதில்லை. ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இந்த பிரச்சனைகள் அனைத்தும் சீர்செய்யபப்டும். காங்கிரஸ் அரசாங்கத்தில் விவசாயி இத்தகைய பிரச்சனையை எதிர்கொள்ள மாட்டார்கள் எனக் கூறினார். 

Trending News