மாநிலங்களவை கூட்டத்தொடரை ஒருநாள் நீட்டிப்பு - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

மாநிலங்களவை கூட்டத்தொடரை ஒருநாள் நீட்டித்து இருப்பதற்கு எதிர்கட்சியினர் போராட்டம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 8, 2019, 05:55 PM IST
மாநிலங்களவை கூட்டத்தொடரை ஒருநாள் நீட்டிப்பு - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு title=

பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுபிரிவு சமூகத்தினருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 10 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும் வகையில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அந்த மசோதாவை இன்று தாக்கல் செய்தது. இதனால் மாநிலங்களவை கூட்டத்தொடரை ஒருநாள் நீட்டிப்பதாக நடுவர் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று(செவ்வாயன்று) மாநிலங்களவை நடுவரின் முடிவை எதிர்த்து பாராளுமன்றத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு முன்பு நின்று கோசம் எழுப்பினர்.

மாநிலங்களவை கூட்டத்தொடரை ஒருநாள் நீட்டித்ததற்கு, அனைத்து எதிர்க்கட்சிகளிடம் கலந்து ஆலோசிக்காமல், தன்னிச்சையாக மத்திய அரசு முடிவெடுத்துள்ளது எனக் குற்றம் சாட்டினார் காங்கிரஸ் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினருமான குலாம் நபி ஆசாத். 

10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா மற்றும் குடியுரிமை தடை மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதன் மீது விவாதம் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவை கூட்டத்தொடரை ஒருநாள் நீட்டித்து இருப்பதற்கு காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் தலைமையில் எதிர்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

Trending News