விரைவில் வெளிர் மஞ்சள் நிறத்தில் புதிய 20 ரூபாய் நோட்டு?

வெளிர் மஞ்சள் நிறத்தில் புதிய 20 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது.

Last Updated : Apr 27, 2019, 12:01 PM IST
விரைவில் வெளிர் மஞ்சள் நிறத்தில் புதிய 20 ரூபாய் நோட்டு?

வெளிர் மஞ்சள் நிறத்தில் புதிய 20 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது.

ரூ. 100, ரூ.50, ரூ.20 ஆகிய நோட்டுகளில் புதிய வண்ணத்தில் ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. அதன்படி ரூ.100, ரூ.50 புதிய நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் வெளியிட்டுவிட்டது.

இந்நிலையில் தற்போது ரூ.20 புதிய நோட்டையும் ரிசர்வ் வங்கி அச்சிட்டுள்ளது. வெளிர் மஞ்சள் நிறத்தில் இந்த நோட்டு உள்ளது. ஒரு பக்கம் மகாத்மா காந்தி படமும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திசாந்ததாஸ் கையெழுத்தும் இடம் பெற்றுள்ளது. இதில் தமிழ் உள்பட 15 மொழிகளில் 20 ரூபாய் என்று அச்சிடப்பட்டுள்ளது.

 

இந்த புதிய 20 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் புழக்கத்துக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. 

More Stories

Trending News