PM மோடியுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை நிராகரித்த ஷரத்!

ஒன்றாக வேலை செய்ய பிரதமர் மோடியின் வாய்ப்பை நிராகரித்ததாக  ஷரத் பவார் தெரிவித்துள்ளார்!!

Last Updated : Dec 3, 2019, 09:10 AM IST
PM மோடியுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை நிராகரித்த ஷரத்! title=

ஒன்றாக வேலை செய்ய பிரதமர் மோடியின் வாய்ப்பை நிராகரித்ததாக  ஷரத் பவார் தெரிவித்துள்ளார்!!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி "ஒன்றாக வேலை செய்ய" முன்மொழிந்ததாக NCP தலைவர் சரத் பவார் கூறியுள்ளார், ஆனால் அவர் அந்த வாய்ப்பை நிராகரித்ததாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து திங்களன்று மராத்தி தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் பவார் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

"மோடி என்னுடன் ஒன்றாக வேலை செய்ய முன்வந்தார். எங்கள் தனிப்பட்ட உறவுகள் மிகவும் நல்லவை என்றும் அவை அப்படியே இருக்கும் என்றும் நான் அவரிடம் சொன்னேன். ஆனால், நான் ஒன்றாக வேலை செய்வது சாத்தியமில்லை" என்று பவார் கூறினார். அவரை இந்தியாவின் ஜனாதிபதியாக ஆக்குவதற்கு மோடி அரசு முன்வந்ததாக வெளியான செய்திகளை பவார் நிராகரித்தார். "ஆனால் மோடி தலைமையிலான அமைச்சரவையில் சுப்ரியா (சுலே) அவர்களை அமைச்சராக்க நிச்சயமாக ஒரு வாய்ப்பு இருந்தது," என்று அவர் மேலும் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து சரத்பவார் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசுகையில்; "பிரதமர் நரேந்திர மோடி ஒன்றாக இணைந்து செயல்பட (மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க) எனக்கு அழைப்பு விடுத்தார். அவரிடம் நான், நமது தனிப்பட்ட உறவு நல்ல முறையில் இருக்கிறது. அது அப்படியே தொடர வேண்டும். ஆனால் ஒன்றிணைந்து செயல்படுவது சாத்தியமற்றது என கூறி விட்டேன். பாரதீய ஜனதாவை ஆதரித்து இருந்தால் என்னை நாட்டின் ஜனாதிபதி ஆக்குவதற்கு மோடி முன்வந்ததாக கூறப்படும் செய்தியில் உண்மை இல்லை.

இருப்பினும் நிச்சயமாக பிரதமர் மோடி தலைமையிலான மந்திரி சபையில் எனது மகள் சுப்ரியா சுலேவை இணைத்துக்கொள்ள வாய்ப்பு இருந்தது. அஜித்பவார், தேவேந்திர பட்னாவிஸ் அரசுக்கு ஆதரவு அளித்த தகவல் கிடைத்தவுடன் நான் முதலில் தொடர்புகொண்டது முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை தான். நடந்த சம்பவம் சரியல்ல. அஜித்பவாரின் செயலை நான் நசுக்குவேன் என நம்பிக்கை அளித்தேன்.

அஜித்பவாரின் நடவடிக்கைக்கு எனது ஆதரவு இல்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் அனைவருக்கும் தெரியவந்தவுடன் அவருடன் இருந்த எம்.எல்.ஏ.க்களுக்கு அழுத்தம் ஏற்பட்டது. அவர்கள் திரும்பி வந்தார்கள்" என அவர் தெரிவித்தார். 

சட்டசபை தேர்தலுக்கு பிறகு மகாராஷ்டிராவில் அரங்கேறிய பல்வேறு அரசியல் நாடகங்களுக்கு பின்னர் சிவசேனா கட்சி, தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைத்தது குறிப்பிடதக்கது.  

 

Trending News